புரட்டாசியில் அவசியம் தரிசிக்க வேண்டிய பூத நாராயண பெருமாள்..! – சிறப்புக்கள் என்ன?
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதம் சனிக்கிழமை தோறும் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் புரட்டாசியில் அவசியம் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய பூத நாராயண பெருமாள் கோயிலின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? ஏன் இந்த பெருமாளை நீங்கள் தரிசிக்க வேண்டும். இதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பூத நாராயண பெருமாள் கோயில் ஆனது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்து உள்ளது. மேலும் இந்தக் கோயிலின் சிறப்பே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் கோவில் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தருவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் திருஷ்டியை போக்க கூடிய ஆற்றல் மிக்கவர்.
மிகவும் பழமையான கோயிலாக இருக்கும் இந்த கோவிலின் சந்நிதிக்கு முன்னாள் ஸ்ரீ கருடன், தும்பிக்கை ஆழ்வார் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் மாட வீதியில் அமைந்து உள்ளது. மேலும் பூத நாராயண பெருமாள் தனது மனைவிகளான ஸ்ரீதேவி, பூதேவியோடு இங்கு காட்சியளிக்கிறார்.
புராணக் கதைகளின் படி கிருஷ்ணரின் தாய் வழி மாமாவான ஹம்சன் கிருஷ்ணனை கொல்ல பல வழிகளை கையாண்டார். எனினும் எல்லா வழிகளிலும் அவர் தோல்வி அடைந்து விடுவார்.
மேலும் குழந்தையாக இருந்த கண்ணனின் அருகே செல்ல முடியாத நிலையில் குழந்தையை கொள்வதற்காக பேய் பெண் பூதனாவை நியமித்தார். வசீகரிக்கும் அழகோடு அவள் குழந்தை கண்ணனிடம் வந்தார். குழந்தை அந்தப் பெண் பூதத்தோடு விளையாடிய சமயத்தில் அவனுக்கு உணவை அளிப்பது போல பாசாங்கு செய்தார். இறுதியில் அந்த பெண் பூதம் பகவானால் வதம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து இந்த தெய்வத்திற்கு பூத நாராயணன் என்ற பெயரை சூட்டி கோயில் கட்டி வழிபட்டார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. இங்குள்ள பூத நாராயண பெருமாள் இடது காலை மடக்கி வலது காலை தரையில் அழுத்தியபடி அமர்ந்திருக்கும் காட்சி எங்கும் காண முடியாத காட்சியாகும்.
வலது கையில் சங்கு மட்டுமே ஏந்தி இடது கை அபய ஹஸ்தத்துடன் பாதுகாப்பு அளித்தபடி காட்சி அளிக்கும் பகவான் ஸ்ரீ கருடன் மீது அமர்ந்து இருக்கிறார். தினமும் கடவுளுக்கு நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.
இனி திருவண்ணாமலை நீங்கள் செல்லும்போது கட்டாயம் பூதநாதப் பெருமாளையும் தரிசித்து வாருங்கள். அவ்வாறு தரிசித்து வரும் போது உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்குவதோடு மட்டுமல்லாமல் பூதங்களால் ஏற்பட்டிருக்கும் தோஷம் பயம் போன்றவை விலகும்.