“தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் கீழடி..!” – கார்னிலியன் மணிகள் கண்டுபிடிப்பு..
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே தோன்றியது தமிழர்களது நாகரீகம் என்பதை பறைசாற்றும் வண்ணத்தில் பல விதமான பொருட்களை அகழ்வாய்வில் கண்டுபிடித்து, வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய வகையில் சில ஆவணங்களை தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள்.
அதுவும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடிகள் தான் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நடந்த பல்வேறு கட்டமான அகழ்வாராய்ச்சியில் பலவிதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பழம் தமிழரின் பெருமையை பறை சாற்றி உள்ளது.
அந்த வகையில் தற்போது ஒன்பதாவது கட்ட அகழ்வாய்வுப் பணிகள் கீழடியில் உள்ள கொந்தை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் 2015 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் கிடைத்தது.
இதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக தமிழ் மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய அணிகலன்கள், ஆயுதங்கள், கண்ணாடி மணிகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதனை அடுத்து கீழடியில் உள்ள பகுதிகளில் தற்போது அகழ்வாய்வுக் குழிகள் தோண்டும் போது ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகிறது.இதில் முதுமக்கள் தாழிக்குள் சூது பவள மணிகள் கிடைத்துள்ளது. இந்த மணிகள் 1.4 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 2 சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக காணப்படுகிறது. பீப்பாய் வடிவத்தில் இருக்கும் இந்த மணிகள் பார்ப்பதற்கு நேர்த்தியான முறையில் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒரே நிறத்தில் மட்டுமே கண்டறியப்பட்ட சூது பவளங்கள், தற்போது அலை அலையாக வரி வடிவத்துடன் வேலைபாடு செய்த நிலையில் கிடைத்துள்ளது. மேலும் இந்த சூது பவள மணிகள் முக்காலங்களில் ஆபரணங்களில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதனை அடுத்து உலகிற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்தது நம் தமிழ் இனமாக இருக்கும் என்ற கருத்து வலுத்து வரும் நிலையில், மேலும் பல கட்ட ஆய்வுகளின் மூலம் தமிழர்களின் உண்மையான வரலாறு உலகத்திற்கு மிக விரைவில் வெளிவரும் என கூறலாம்.
இதுவரை கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை அந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்வையிடலாம்.
மேலும் உங்களுக்கு இது போன்ற கருத்துக்கள் தெரியும் பட்சத்தில் தயங்காமல் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.