தமிழகத்தை பதற வைத்த சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர்..! – மிரட்டும் கொலைகள்..
1980 மற்றும் 90களில் தமிழகத்தையே உலுக்கிய கொலைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? மர்மமான முறையில் தொடர்ந்து நிகழ்த்த கொலைகள், இதற்கு காரணம் ஒரு சீரியல் கில்லர், சைக்கோ கில்லர் என்று பல பெயர்களால் வர்ணிக்கப்பட்டு நம் மனதுக்குள் பயத்தை ஏற்படுத்திய இந்த தொடர் கொலைக்கு யார் காரணம்.
இந்தக் கேள்வியை உங்களுக்கு முன் வைக்கும் போது நீங்கள் எளிதாக ஆட்டோ சங்கர் கொலை வழக்கு பற்றி யோசிப்பீர்கள். அது முற்றிலும் உண்மையானது தான். எந்தவிதமான காரணமே இல்லாமல் மக்களை வித்தியாசமான முறையில் விதவிதமாக கொன்று கொலை செய்த ஆட்டோ சங்கர் கடைசியில் தூக்கு தண்டனையை பெற்றார்.
1988 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி சென்னை மந்தவெளியை சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகிய மூன்று பேரும் காணாமல் போக பல இடங்களில் தேடிய நிலையில் இவர்களை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் அவர்களது குடும்பத்தார் போலீசாரில் புகார் கொடுத்தார்கள்.
இதனை அடுத்து இந்த விசாரணையில் களம் இறங்கிய போலீசார் காணாமல் போன சம்பத் தையல் காரனாக பணியாற்றி இருக்கிற விஷயத்தையும், மோகன் பொதுப்பணி துணையில் பணியாற்றுகிறார் என்ற விஷயத்தையும் கண்டறிந்து இருவருக்கும் பொதுவான ஒரு நண்பராக கோவிந்தராஜ் இருந்திருக்கிறார் என்ற தகவலை கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து இவர்களைப் பற்றிய ஒரு முழு விசாரணையில் ஈடுபட்ட போது தான் அவர்களது முக்கிய முகம் தெரிந்தது. அந்த வகையில் இவர்கள் மூவரும் பெண்களின் மீது அதிக அளவு மோகம் கொண்டவர்கள் என்றும் காசுக்காக பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் இவர்கள் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் ஆட்டோ சங்கர் எனப்படும் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார்கள்.
மிகக் கொடூரமான சீரியல் கில்லராக கூறப்படும் இந்த ஆட்டோ சங்கர் யார் என உங்களுக்கு முழுமையாக தெரிய வேண்டாமா? 1980களில் தமிழகத்தில் கள்ளச்சாராய வியாபாரம் கொடி கட்டு பறந்த போது அந்த சாராயத்தை கடத்தி விற்பனை செய்து வந்த நபர் தான் இவர். பகலில் ஆட்டோவை ஓட்டிவிட்டு இரவு நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதை கடத்தி விற்று வந்தார்.
இதனை அடுத்து காசு புழக்கம் இவரிடம் அதிகரிக்க இவரிடம் பலர் அடிமையாக இருந்திருக்கிறார்கள். சென்னை திருவான்மியூர் பகுதியில் சாராயம் காய்ச்சிய இவரை எந்த பகுதியில் தெரியாதவர்களை யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு பிரபலம் ஆகிவிட்டார்.
என்ன நடந்தாலும் அந்தப் பகுதியில் ஆட்டோ சங்கருக்கும் அந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கும் என்று கூறும் அளவுக்கு பெயர் வாங்கிய ஆட்டோ சங்கரின் உண்மையான பெயர் கௌரி சங்கர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்து வாழ்ந்தவர்.
தாயின் அன்பு கிடைக்காமல் வறுமையில் வாடிய கௌரி சங்கர் பணம் இல்லாமல் சிரமப்பட்டதின் காரணத்தால் பணம் வைத்திருப்பவரை பார்க்கும் போது அவருக்குள் ஒரு பொறாமை ஏற்பட்டு உள்ளது. எனவே சிறு வயதிலேயே சீக்கிரமாக பணக்காரராக வேண்டும் என்ற ஆசை அவனுள் இருந்தது.
ஆட்டோவை ஓட்டி வந்த சூழ்நிலையில் போதுமான அளவு பணம் கிடைக்காத சூழ்நிலையில் கள்ளச்சாராயத்தைக் அதை ஆட்டோவின் மூலம் தெரியாமல் விநியோகித்த அதிக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கள்ளச்சாராய வியாபாரத்தை தொடங்கி ஆட்டோவிலேயே அதை எடுத்துச் சென்று கோவளம் கடற்கரையில் உள்ள பகுதிகளில் விற்றதன் மூலம் அதிகம் பணம் கிடைத்தது.
அடுத்து இந்த தொழிலையே தினமும் செய்ய ஆரம்பித்த இவருக்கு பணம் அதிகமாக கிடைத்ததின் காரணத்தால் தானும் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். குடிக்கு அடிமையாகிய கௌரி ஷங்கர் அடுத்து பெண்களின் மீது மோகம் ஏற்பட சின்ன சின்ன தவறுகளை காசுக்காக செய்ய ஆரம்பித்து காசுக்காக விபச்சாரம் செய்யும் பெண்களிடமும் பழகத் துவங்கி விட்டார்.
சாராயத்தை போல விபச்சாரத் தொழிலிலும் அதிக அளவு பணம் கிடைக்கும் சம்பாதிக்க முடியும், என்பதை உணர்ந்து கொண்ட அவர் விபச்சார தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இதன் மூலம் அதிக அளவு வருவாய் பார்த்த ஆட்டோ சங்கர் சுகபோக வாழ்க்கையை நடத்தினார்.
அந்த வகையில் இவருக்கு சில பெரும் புள்ளிகளின் பழக்கவழக்கம் கிடைத்தது. பெண்கள் மீது மோகம் கொண்டவர்கள் ஆட்டோ சங்கரை அணுகத் தொடங்கினார். இதனை அடுத்து ஆட்டோ சங்கர் தன்னிடம் உள்ள பெண்களை அவர்களுக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் பணம் பார்த்தான்.
திடீர் என ஆட்டோ சங்கருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன் மூலம் பெரிய மனிதர்களிடம் செல்லும் பெண்களிடம் ஒரு சிறிய கேமராவை கொடுத்து அந்த நபர்களோடு நெருக்கமாக இருக்கும்போது வீடியோவை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ள அந்த பெண்களும் அப்படியே செய்தார்கள்.
இந்த வீடியோக்களை வைத்து பெரிய மனிதர்களை மிரட்ட ஆரம்பித்தார். இதன் மூலம் பணம் கேட்டு மிரட்டி பல வகைகளில் சட்டவிரோதமான செயல்களை செய்ய ஆரம்பித்தார்.
இந்த செயல்களின் மூலம் அதிக அளவு பணத்தை சம்பாதித்த ஆட்டோ சங்கர் போலீஸ் துறையில் இருக்கும் பெரும் அதிகாரிகள், அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரிகளை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார். இதனை அடுத்து சில நல்ல விஷயங்களையும் செய்ய துவங்கினார். அதில் குறிப்பாக ஏழை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டுவது ஏழை மக்களுக்கு உதவுவது போன்ற செயல்களை செய்வார்.
இதன் இடையில் எல்லா தொழில்களைப் போல இவன் செய்த தொழிலிலும் போட்டி ஏற்பட்டு, பெண்களை பங்கிடுவதில் பிரச்சனைகள் எழுந்த காரணத்தால் தன்னை எதிர்க்க நினைத்தவர்களையும் துரோகம் செய்ய நினைத்தவர்களையும் வெட்டி கூறு போட்டான்.
அப்படி கொலை செய்த உடல்களை தம் வீட்டு சுவற்றிலேயே புதைத்து வைத்தான். இறுதியில் போலீசார் அவரை கைது செய்தது.