விளாம்பழம் மறந்திடாமல் சாப்பிட வேண்டிய ஒன்றா? – அப்படி என்ன இருக்கு இதில்..
நம் நாட்டிலேயே விளையக்கூடிய பழங்களின் மதிப்பை அறிந்து கொள்ளாமல் வெளிநாட்டு பழங்களை வாங்கி உண்ண கூடியவர்கள் நிறைய பேர் தற்போது பெருகி வருகிறார்கள்.
எனினும் உள்நாட்டில் கிடைக்கும் பழங்களை அந்தந்த சீசன்களில் வாங்கிச் சாப்பிடுவதின் மூலம் உங்களின் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதோடு, இயற்கையிலேயே பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நம் பகுதியில் விளையக்கூடிய பழங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இன்று விளாம்பழம் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். இந்த விளாம்பழத்தை ஆங்கிலத்தில் உட் ஆப்பிள், ஸ்டோன் ஃப்ரூட் என்று கூறுவார்கள். குறித்த சீசனில் மட்டும்தான் இந்த பழம் கிடைக்கும் குறிப்பாக ஆவணி புரட்டாசி மாதங்களில் அதிக அளவு கிடைக்கக்கூடிய பழமா? என்றால் இல்லை எனக் கூறலாம்.
இந்தப் பழத்தின் மேல் இருக்கும் ஓடு மிக கடினமாக இருப்பதால்தான் இதை ஸ்டோன் ஃப்ரூட் என்று அழைக்கிறார்கள். இந்த ஓட்டை உடைத்து விட்டால் உள்ளே சதை பகுதியாக இருக்கும் பகுதியை மட்டும் தான் நீங்கள் சாப்பிட வேண்டும்.
இரண்டு வகைகளில் இந்த சதை பற்றுள்ள பகுதியை நீங்கள் சாப்பிடலாம். இனிப்பு சுவையை விரும்புபவர்கள் இந்த சதைப்பகுதியில் சிறிதளவு வெல்லத்தை பொடி செய்து அதனுள் போட்டு நன்கு கலக்கி கைகளாலோ அல்லது ஸ்பூனாலோ எடுத்து சாப்பிட்டால் அந்த சுவையை உங்களால் மறக்க முடியாது.
இந்த இனிப்பு சுவையோடு சிறிதளவு மிளகாய் தூளும் சேர்த்து நன்கு பிரட்டி சாப்பிடும்போது சொர்க்கமே உங்கள் பக்கத்தில் வந்து இருப்பது போல நீங்கள் உணருவீர்கள். அந்த அளவு சுவையாக இருக்கும்.
உடலுக்கு குளிர்ச்சியை அதிக அளவு தந்துவிடும் என்பதால் இதை பலரும் உண்ணாமல் தவிர்த்து வருகிறார்கள். ஆனால் இந்த பழத்தை உண்ணுவதன் மூலம் உங்களுக்கு பசிக்கக்கூடிய தன்மை அதிகரிக்கும்.ளாள ரத்தத்தை சுரக்க வைக்க கூடிய தன்மை இதற்கு உள்ளது.
விளாம்பழத்தை சாப்பிடுவதின் மூலம் பித்தம் நீங்கும் தலைசுற்றல் போகும். கோழையை அகற்றி விடும், வாய்ப்புண், ஈறு போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருப்பதோடு இருமல் சளி போன்ற சுவாசக் கோளாறுகளை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதோடு வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்றவற்றை நீக்கக்கூடிய அற்புத ஆற்றல் கொண்டது. ஆஸ்துமாவுக்கும் அலர்ஜிக்கும் அருமருந்தாக இருக்கும். இந்த பழத்தை நீங்கள் பார்த்தால் கட்டாயம் வாங்கி சாப்பிடுங்கள்.