மனிதனை மிரட்டும் மர்மங்கள்..! – மறு ஜென்மம் பற்றி திகில் தகவல்கள்..
நான் எடுத்திருக்கும் இந்த ஜென்மத்தையே புரிந்து கொள்ள முடியவில்லை இதனை அடுத்து மறு ஜென்மம் என்பதை பற்றி நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்ற சந்தேகம் உங்களுக்குள் இருக்கும்.
எனினும் இது பற்றிய ரகசியம் இன்று வரை பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அப்படி அதில் பாதுகாக்கப்படக்கூடிய மர்மங்கள் என்ன? மறு ஜென்மம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி ஒரு விரிவான அலசலை இனி பார்க்கலாம்.
மறுஜென்மம் பற்றி ஆராய்கையில் இதற்கு முன்பு எடுத்த ஜென்மம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?. ஏற்கனவே முன் பிறந்த ஜென்ம ஞாபகத்தை சில சில வேளைகளில் வெளிப்படுத்தி இருப்பதை நாம் கேட்டிருக்கிறோம். இந்த முன் ஜென்மம் என்பது உங்கள் நினைவுகளில் இருக்கக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பூர்வ ஜென்ம நிகழ்வுகள் கண்டிப்பாக சிலருக்கு ஏற்படும்.இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கிறது.. என்பது இன்றுவரை புரியாத புதிராக இருக்கின்ற வேளையில் முன் நிகழ்வுகள் உள்ளது என்று கூறும் பட்சத்தில் மறு ஜென்மம் என்பது கட்டாயம் இருக்கலாம் என்ற நம்பிக்கையை இது ஏற்படுகிறது.
நமது சமயத்தை பொறுத்தவரை மனிதனாகப்பட்டவன் மட்டுமல்லாமல் எந்த ஒரு ஜீவராசிகளும் ஏழு பிறவிகளை எடுக்குமாம். அப்படி ஏழு பிறவிகள் எடுக்கும் பட்சத்தில் கட்டாயம் மறுபிறவி என்பது உண்மை என்றே தோன்றும்.
அது மட்டுமல்லாமல் இந்து மதத்தின் படி சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்கள் உள்ளது அனைவரும் அறிந்த கருத்து தான். நன்மை செய்பவர்களுக்கு சொர்க்கமும், தீமை செய்பவர்களுக்கு நரகமும் கிட்டும் இந்த சூட்சும ரகசியம் தான் பிரபஞ்ச ரீதியான பிறவியில் சம்பந்தப்பட்டுள்ளது என கூறலாம்.
ஜோதிடத்தை பொருத்தவரை ஒருவர் முற்பிறவியை ஐந்தாம் இடம் கொண்டு கணக்கிட்டால் போன பிறவியில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என துல்லியமாக தெரியும் என கூறி இருக்கிறார்கள். மேலும் மகாபாரத போரில் அர்ஜுனன் தனது மகனை இழந்து விடுகிறான் .அந்த சூழ்நிலையில் புத்திர சோகம் தாங்காமல் இருக்கும் அர்ஜுனனை சொர்க்கத்திற்கு கண்ணன் அழைத்து செல்கிறார்.
அங்கு அபிமன்யு உல்லாசமாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்பதை பார்த்து அர்ஜுனன் மகன் அருகே சென்றபோதும் அவன் தனது தந்தையை அடையாளம் தெரியாமல் இருக்கிறார். எனவே நாம் செய்யும் அதாவது முற்பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறவி அமைகிறது இதைத்தான் கர்ம வினை என்று கூறுகிறார்கள்.
எனவே மறு ஜென்மம் என்பது இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதால் இருக்கின்ற காலத்தில் நீங்கள் தான தர்மங்கள் செய்வதின் மூலம் எடுக்கின்ற பிறவி சிறப்பான பிறவியாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.