“சிறுவயதிலேயே மலட்டுத்தன்மை..!” – காரணம் லேப்டாப்..
இன்று லேப்டாப்பின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஒவ்வொருவரும் தனது பணிக்காக லேப்டாப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது அந்த லேப்டாப்பை ஆண்கள் தங்களது மடியில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவரின் மூலம் விரைவில் மலட்டு தன்மை ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்குக் காரணம் அதிக அளவு லேப்டாப்பில் இருந்து வெளி வரும் வெப்பம் மற்றும் கதிர்வீச்சானது ஆண்களின் விரைப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தி விந்தணுக்களின் அளவை குறைக்கிறதாம்.
பெரும்பாலும் ஐடி துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு இந்த நிலை ஏற்படுவதால் அவர்களின் எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் மிகப்பெரிய சிக்கலை இனி வரும் காலங்களில் அவர்கள் சந்திக்க வேண்டி வரும்.
அந்த வகையில் லேப்டாப்பை அதிகம் பயன்படுத்தும் ஆண்களுக்கு ஸ்க்ரோடல் ஹைபர்தெர்மியா உருவாகிறது. மேலும் ஏசியில் அதிக அளவு இருப்பவர்கள் மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் ஆண்களின் விந்துக்களின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாக மருத்துவ ஆய்வு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்வதின் மூலம் தொடைகளில் ஏற்படும் வெப்பம் மற்றும் மின்காந்த புலம் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதோடு உற்பத்தி திறனையும் குறைத்து விடுகிறது.
மின்சாரம் மற்றும் காந்த சக்திகளின் கலவையால் உண்டாக்கப்படும் ஒருவித மின்காந்த கதிர்வீச்சு உடலை பாதிப்படைய செய்கிறது. இதில் இருக்கும் உயர் அதிர்வெண்களைக் கொண்ட எக்ஸ்ரே கதிர்கள் உடலில் புற்று நோயை கூட ஏற்படுத்தும்.
இதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், விந்தணுவின் டிஎன்ஏ சேதமாகுதல், விந்தணுவின் அளவு மற்றும் வடிவம் மாறுதல், முக்கிய ஹார்மோன்கள் சீர்குலைதல் போன்றவை நிகழ்வதாக மருத்துவர் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் நீங்கள் இரண்டு கால்களையும் பிணைத்தவாறு அமர்ந்து நீங்கள் உங்கள் லேப்டாப்பை வைத்து வேலை செய்யாமல் இருக்க வேண்டும். அதற்காக உங்கள் கால்களுக்கு இடையே சிறிது இடைவெளியை விட்டுக் கொள்வது மிகவும் நல்லது.
முடிந்தவரை அதிகளவு லேப்டாப்பின் பயன்பாட்டை நீங்கள் தவிர்த்து விட்டு பயன்படுத்தக்கூடிய சமயத்தில் மர மேஜையில் வைத்து பயன்படுத்துங்கள்.
சூடான உணவை தவிர்த்து விட்டு தளர்வான உடைகள், பேண்ட் போன்றவற்றை அணிவதின் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து சற்று வெளி வர முடியும்.
எனவே இனிமேலாவது லேப்டாப்பை பயன்படுத்தும் போது நீங்கள் ஏற்படும் தீமைகளை உணர்ந்து அதற்கு ஏற்றபடி அந்த சிக்கல்களில் இருந்து தப்பிக்க கூடிய வகையில் பயன்படுத்த முயற்சி செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.