ஒன்றல்ல… மூன்று ஔவையார் இருந்தார்களா? – யார் இந்த ஔவை பாட்டி..
பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பெண்பால் புலவர் ஔவையார். இவர் பாணரகத்தில் அவதரித்ததாக குறிப்புகள் காணப்படுகிறது.
சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஔவையார் என்று கருதப்பட்டு வரும் நிலையில் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி மூன்று பெண் புலவர்கள் 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஔவை எனும் பெயருடன் ஒரே விதமான குணாதிசயங்கள் மற்றும் புலமையோடு வாழ்ந்து இருப்பதாக தெரிகிறது.
ஔவையார் என்ற பெயருக்கு புத்திசாலி அல்லது மூத்தவர் என்ற பொருள் உள்ளது. தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், பன்முகத் தன்மைக்கும் இவர்கள் ஆற்றிய தொண்டு சிறப்பு வாய்ந்தது.
இதில் முதல் ஔவையார் ஆத்திச்சூடி படைத்தவர். இவரை ஆத்திச்சூடி ஔவையார் என்று அழைத்திருக்கிறார்கள். சங்ககாலத்தில் இவர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது பிரபலமான படைப்பு ஆத்திச்சூடி தான்.
குழந்தை ஔவையார் என்று அழைக்கப்படும் இரண்டாவது ஔவையார் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பணியை செய்திருக்கிறார். இவர் நல்வழி அல்லது நேர்மையான பாதை, நல் ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இந்த உரை ஆத்திச்சூடியை போல பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது.
மூன்றாம் ஔவையார் கிபி 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. மேலும் இவரது போதனைகள், ஆன்மீக கருத்துக்கள், உறவுகள் போன்றவை என்றும் மனிதர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தது.
மேலும் ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் 14 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுக்கு மத்திய காலகட்டத்தில் இரண்டு ஔவையார்கள் வாழ்ந்துள்ளதாக கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். எனினும் இவர்களது வாழ்க்கை குறிப்பு பற்றி எந்தவிதமான தடயமும் நமக்கு கிடைக்கவில்லை.
சங்க காலப் புலவர்களில் ஒருவரான ஔவை எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் தனது பாடல்களை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக இவர் 59 பாடல்களை பாடி இருக்கிறார் அவற்றில் புறத்திணை பாடல்கள் 33 எனவும் ஏனைய 26 பாடல்கள் அகத்திணையைச் சார்ந்தது என்று கூறலாம்.
கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த அதியமானுக்கும், அண்டை நாட்டவரான தொண்டைமானுக்கும் இடையே ஏற்பட்ட போரை பெண்பாற்புலவரான ஔவையார் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
காலப்போக்கில் ஔவையார் என்ற பெயரானது பட்டமாக மாறியது. இதனை அடுத்து தற்போது இருக்கும் பெண் கவிஞர்களுக்கு ஔவையார் என்ற பட்டம் வழங்கப்படுகிறது.
இதுவரை ஒரு ஔவையார் மட்டுமே இருந்திருக்கிறார் என்று நாம் நினைத்து இருப்போம். ஆனால் மூன்றுக்கும் மேற்பட்ட ஔவையார் இருந்திருக்கிறார்கள் என்பது இந்த கட்டுரையின் மூலம் உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும்.