• November 21, 2024

என்னது.. நேதாஜியை கொலை செய்த சம்பவம் நேருவுக்கு தெரியுமா? – என்ன நடந்தது..

 என்னது.. நேதாஜியை கொலை செய்த சம்பவம் நேருவுக்கு தெரியுமா? – என்ன நடந்தது..

Subhas Chandra Bose

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு அளப்பரியது எனக் கூறலாம். நேசாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

ஆனால் இவரின் மரணத்தின் மர்ம முடுச்சு இன்று வரை அவிழ்க்கப்படாமல் உள்ளது என்று கூறலாம். நாம் எல்லோரும் நினைப்பது போல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லையாம்.

Subhas Chandra Bose
Subhas Chandra Bose

மாறாக இவர் விமான விபத்தில் இறந்ததாக கதைக்கட்டி இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு அவர் சீனா சென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில் சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நமது நேதாஜியை சிறைபிடித்து சைபீரிய சிறையில் அடைத்தார்.

இதனை அடுத்து அவரை அந்த சிறை சாலையிலேயே வைத்து கொலை செய்து விட்டார்கள். அப்படி கொலை செய்த விஷயம் ஜவஹர்லால் நேகருவுக்கும் தெரியும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருக்கிறார்.

இந்த கொலை தொடர்பான கோப்புகள் இந்திய அரசிடம் உள்ளது. அவற்றை வெளியிட்டால் இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும், ரஷ்யாவிற்கும் இடையே உள்ள உறவு கெட்டுவிடும் என்பதால் இன்று வரை அதனை வெளியிடாமல் இருக்கிறார்கள்.

Subhas Chandra Bose
Subhas Chandra Bose

1945 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்பது பொய். அவர் விமான விபத்தில் இறந்தது போல் நாடகம் ஆடி விட்டு இந்தியாவிலிருந்து தப்பி சென்றிருக்கிறார்.

 அவ்வாறு தப்பிச்சென்ற போது சீனாவின் மஞ்சூரியாவிற்கு சென்றிருக்கிறார். அந்தப் பகுதி அப்போது ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

நேதாஜி ரஷ்யா தன்னை கண்டிப்பாக காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது அங்கு நடக்கவில்லை. அவரை கைது செய்து விட்டார்கள். கைது செய்த பிறகு அவரை தூக்கிலிட்டோ அல்லது மூச்சு திணறடிக்கப்பட்ட கொலை செய்திருக்க வேண்டும்.

Subhas Chandra Bose
Subhas Chandra Bose

1953 ஆம் ஆண்டில் நேதாஜி கொல்லப்பட்டுள்ளார். இதற்கான ரகசிய ஆவணங்கள் நம்மிடையே உள்ளது என்ற அதிர்ச்சி சம்பவத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த ஆதாரத்தை வெளியிடுவதின் மூலம் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால் இன்று வரை அவற்றை நாம் வெளியிடவில்லை. மேலும் சுப்ரமணிய சுவாமி கூறியிருக்கும் தகவல் உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 ஏனெனில் 1922 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி அந்தப் பகுதியை ஸ்டாலின் ஆட்சி செய்திருக்கிறார். இதனை அடுத்து 1953 ஆம் ஆண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேதாஜி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.