• December 22, 2024

“தினமும் ஒரு கப் க்ரீன் டீ” –  குடிப்பதால் உண்டாகும் மாற்றங்கள்..

 “தினமும் ஒரு கப் க்ரீன் டீ” –  குடிப்பதால் உண்டாகும் மாற்றங்கள்..

Green Tea

கிரீன் டீ என்பது பசும் தேநீர் ஆகும்.  இந்த பசும் தேநீர் முதலில் சீனாவில் தோன்றியது. பின்னர் ஜப்பானில் இருந்து மத்தியகிழக்கு வரையிலான ஆசியாவின் பல கலாச்சாரங்கள் தொடர்புடைய நாடுகளுக்கு பரவியது. 

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கலாம். இது பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிக அளவு சத்து இந்த கிரீன் டீயில் உள்ளது .

Green Tea
Green Tea

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ குடித்தால் 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடியல் செல்களை சமன்படுத்தி நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

கிரீன் டீ ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.மேலும் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு தேவையான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. 

இதுமட்டுமின்றி ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை நீக்குகிறது.

Green Tea
Green Tea

அத்துடன் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்று நோய் செல்களை வளர விடாமல் பாதுகாக்கிறது. எலும்பில் உள்ள தாதுப் பொருட்களின் அளவை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது. பற்களில் ஏற்படும் சொத்தை பல் பிரச்சனையைத் தீர்க்கிறது.

மேலும் வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. ஞாபக சக்தியை அதிகரித்து, சருமத்தை பாதுகாத்து என்றும் இளமையோடு இருக்க வழி செய்கிறது.முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கிறது.

Green Tea
Green Tea

 நரம்பு மண்டலம் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது .மூட்டு வலியை தடுக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது. உலகிலேயே அதிக அளவில் கிரீன் டீயை ஜப்பானியர்கள் தான் அருந்தி வருகிறார்கள் அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். 

இந்த டீயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேலே சொன்ன அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை  பாதுகாத்து கொண்டு விடுதலை அடையலாம்.