“உலகில் முதல் நாய் மற்றும் நரி கலப்பினம் டாக்ஸிம்” (DOGXIM) – அறிவியல் உலகில் அளப்பரிய சாதனை..
இன்று அபரிமிதமாக வளர்ந்திருக்கும் அறிவியல் துறையில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக உயிரியல் துறையில் கலப்பின மாடுகள், ஆடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தாவரங்களை உருவாக்கி மக்களுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் விஞ்ஞானிகள் செயல்பட்டு இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் அறிவியல் உலகில் அளப்பரிய சாதனையாக நாய் மற்றும் நரி களப்பினத்தால் உருவாகியுள்ள உயிரினம் பற்றிய அற்புத தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த கலப்பினம் தொடர்பாக உயிரியல் வல்லுநர்கள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறலாம்.
2021 ஆம் ஆண்டு பிரேசில் ரியோ கிராண்டோ பகுதியில் நரி போன்ற தோற்றமுடைய ஒரு உயிரினம் கண்டறியப்பட்டிருந்தது. காயம் அடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த உயிரினம் குறைத்து விரிவான ஆய்வுகளை உயிரியல் வல்லுனர்கள் மேற்கொண்டார்கள்.
பார்ப்பதற்கு நாய் மற்றும் நரியின் தோற்றத்தைக் கொண்டிருந்த இந்த விலங்கு நாய் உண்ணும் வழக்கமான உணவுகளை உண்பதோடு, குட்டி எலிகளை விருப்பத்தோடு சாப்பிட்டுள்ளது.
இந்த உயிரினத்தின் கண்கள் பார்ப்பதற்கு வீட்டு நாயை போலவும், காதுகள் நீண்டு நரியைப் போன்ற தோற்றத்தில் இருந்தது. மேலும் நாயைப் போல இந்த விலங்கு கத்திய நிலையில் இந்த உயிரினம் நாய் மற்றும் நரியின் கலப்பினம் என உறுதி செய்யப்பட்டது.
இதற்கு காரணம் இந்த கலப்பின உயிரி நாயைப் போல சாதுவாக இல்லை. காட்டு விலங்குகளுக்கு இருக்கும் ஆபத்தான குணங்கள் இவற்றிடையே காணப்பட்டது. எனவே இந்த கலப்பினத்திற்கு டாக்ஸிம் (DOXIM) என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.
பார்ப்பதற்கு நேர்த்தியான முறையில் அமைந்திருக்கக் கூடிய இந்த டாக்ஸிம் வித்தியாசமான குண நலன்களை கொண்டு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
சண்டா மரியா நகரில் உள்ள உயிரியல் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த உயிரினம் தற்போது இறந்து விட்டது. இதற்கு என்ன காரணம் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை.
உங்களுக்கு இந்த உயிரினம் பற்றிய வேறு ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை மறக்காமல் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.