என்னடா சொல்றீங்க.. ரத்த ஓட்டத்துடன் காணப்படும் முருகன் சிலையா?
முருகன் என்றால் அழகன் என்று பொருள். தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். தனது ஒவ்வொரு வீட்டில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு நன்மைகளை பயத்து வரும் முருகப்பெருமான் எட்டுக்குடியில் இருக்கும் கோவிலில் ரத்த ஓட்டத்துடன் இருக்கிறார் என்றால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
இந்தச் சிலையை நாகப்பட்டினம் பொருள் வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி உருவாக்கி இருக்கிறார். நீண்ட நாட்களாக அழகான முருகன் சிலையை அமைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சோழ அரசர் என்ற சிப்பியை அழைத்து முருகன் சிலையை வடிக்க ஆணையிட்டார்.
சிப்பியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து, சிற்பத்தை செதுக்கு ஆரம்பித்த போதும் நகர்வலம் வந்த மன்னர் சிற்பி செதுக்கிய முருகன் சிலைக்கு ரத்த ஓட்டம் உள்ளதை கண்டு அதிசயம் அடைந்தார்.
சோழர்களால் உருவாக்கப்பட்ட இந்த சிலை வேறு எங்கும் இருக்கின்ற சிலைகள் போல இருக்கக் கூடாது, என்று எண்ணி சிற்பத்தை செய்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டார்கள்.
எனினும் இந்த சிற்பி மனம் தளராமல் மற்றொரு முருகன் சிலையை செய்ய ஆவல் கொண்டு அதற்கான உயிரோட்டம் உள்ள கல்லை தேடி வந்தார். அந்த சிற்பி எதிர்பார்த்ததுபோல ரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொண்ட கல் நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு கல்லை கண்டுபிடித்து அதில் முருகனின் சிலையையும், மயிலையும் செதுக்கினான்.
இதை எடுத்து அந்த பகுதியை ஆண்டு வந்த குறு நில மன்னனான முத்தரசனிடம் ஒருவர் காட்டை விரல் இல்லாத சிற்பி ஒருவர் செதுக்கிய முருகன் சிலையை நேரில் பார்த்ததாகவும் அது அவ்வளவு தத்துரூபமாகவும் உள்ளது என்பதை கூற அந்த மன்னர் அந்த சிற்பத்தை காண வேண்டும் என்று ஆவல் கொண்டார்.
மேலும் அந்த சிற்பி வடித்த சிலையில் மயிலை வடிக்கும் போது அந்த மயில் பறக்க முயன்றதாம். இதனால் சிப்பி எங்கே முருகன் மயில் லோடு பறந்து விடுவாரோ என எண்ணி மயிலின் கால்களை சேர்த்து கட்டிய நிலையில் சிலையை செதுக்கியிருக்கிறார்.
சுமார் 5.30 அடி உயரம் இருக்கும் இந்த முருகன் சிலையை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், வயதில் முதிர்ந்தவர்களாக பார்த்தால் முதியவர்களாகவும் காட்சி அளிக்க கூடிய வகையில் வடிக்கப்பட்டுள்ளது.
தற்போது எட்டுக்குடியில் இருக்கும் இந்த முருகப்பெருமானை நீங்கள் தரிசிக்கும் போது தெரியும். ரத்த ஓட்டத்தோடும், வியர்வையுடனும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கும் முருகன்.