“ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்தியதா? மெக்சிகோ..!” – மறைந்திருக்கும் மர்மம்..
உலகம் முழுவதும் வேற்று கிரகவாசிகளை பற்றிய கருத்துக்கள் பல்வேறு வகையில் பரவி வருவதோடு, அவை வரும் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளும் தினம், தினம் புதுப்புது தினசுகளில் வெளிவருவது வாடிக்கையான ஒன்றுதான்.
இதனை அடுத்து மெக்சிகோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த இரண்டு ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுவரை எந்தவிதமான தடயங்களும் கிடைக்காத நிலையில் யு எப்ஓ மற்றும் ஏலியன்கள் குறித்த விஷயங்கள் வாய்வழி தகவல்களாக இருந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் இதனைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மெக்சிகோ நகரில் ஏலியன்களின் உடல்கள் கண்காட்சி படுத்தப்பட்டுள்ள பகிர் தகவல்கள் பரவலாகி வருகிறது. மேலும் இதில் ஏலியன்களின் உடல்களா? இல்லையா? என்பது பற்றிய விவாதங்களும் நடந்து வருகிறது.
பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மவுசன் தலைமை தாங்கினார். அமெரிக்க கடற்படையின் முன்னாள் விமானி ரியான் உடன் இருந்தார். இவர்கள் தங்களது பணியின் போது வேற்று கிரக விண்கலத்தை பார்த்ததாக அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்கள்.
இந்த கண்காட்சியில் இரண்டு ஏலியன்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனிதர்களைப் போல் அல்லாமல் மிகச்சிறிய அளவில் இருந்தது. இவற்றை ஒரு பெட்டியில் வைத்திருந்தார்கள். இந்த சடலங்கள் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது.
இந்த ஏலியன்களின் உடல்களை பறக்கும் தட்டுகளில் இருந்து இவர்கள் மீட்கவில்லை எனவும், இவை பெருவில் உள்ள குஸ்கோவில் ஒரு வகையான பாசி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்கள்.
அப்படி எடுக்கப்பட்ட இந்த உடல்களை ரேடியோ கார்பன் டேட்டிங் பரிசோதனை செய்து பார்த்தபோது தான் இந்த ஜீவராசிகள் பூமியில் வாழ்ந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்கள். மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ஏலியன்கள் பற்றிய ஆர்வத்தை மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது என கூறலாம்.
எனவே இதுவரை ஏலியன்கள் பற்றி வெறும் வாயில் பேசிக்கொண்டிருந்த அவர்களுக்கு இந்த கண்காட்சியின் மூலம் ஏலியன்கள் பற்றி அதிக அளவு பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இனிவரும் காலங்களில் இவை மெய்யானதா? என்பது தெரியவரும்.