பொய் பேசும் குழந்தைகளை வழிக்கு கொண்டு வரக்வேண்டுமா? – சூப்பர் டிப்ஸ்..
இன்று இருக்கும் இளம் தலைமுறை குழந்தைகளுக்கு கவன சிதறலை அதிகரிக்க கூடிய வகையில் பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் அவர்கள் வீடுகளிலும், கைகளிலும்,சமூகத்திலும் அடங்கி உள்ளது என்று கூறலாம்.
அந்த வகையில் அந்த குழந்தைகள் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு சீரிய வகையில் வளர்கிறார்களா? என்ற கவலை தற்போதைய பெற்றோர்களுக்கு அதிகமாகவே உள்ளது. மேலும் பல வகையான சீரியல்களைப் பார்த்து சிந்தனைகளை சிதைத்து இருக்கும், குழந்தைகள் சிறு வயதிலேயே பொய் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதனை அடுத்து குழந்தைகள் பொய் பேசுவது தங்களாலேயே ஏற்படுகிறது என்று ஒரு சில பெற்றோர்கள் தவறான அவிப்பிராயத்தை கொண்டுள்ளார்கள். அந்த கருத்தை அவர்களிடம் இருந்து எடுத்துவிட்டு அந்த குழந்தைகளை எப்படி பொய் பேச விடாமல் இருக்க, என்னென்ன வழிகள் உள்ளது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே குழந்தைகள் பொய் பேசுவதற்கு விதவிதமான காரணங்கள் இருக்கலாம். எனினும் பொய் கூற ஆரம்பித்து விட்டால் அது தொடர்கதையாக மாறிவிடும். இந்த குழந்தைகள் ஏன் பொய் பேசுகிறார்கள் என்பதை பற்றி பெற்றோர்கள் முதலில் யோசித்து கண்டுபிடிக்க வேண்டும். அதை விடுத்து கடுமையான முறையில் ரியாக்ஷனை காட்டி அவர்களை அடி படிய வைக்கக்கூடாது.
மேலும் குழந்தைகள் பொய் பேசுவதினால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், அதனால் ஏற்படுகின்ற தாக்கத்தையும் அவர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகள் பொய் பேசுவதே உங்களுக்கு தெரியாது. அப்படி பொய் பேசுவதை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் உடனடியாக நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மீது அதீத கவனத்தை செலுத்த வேண்டும்.
குழந்தைகள் பேசும் பொய்களின் மூலம் மற்றவர்களுக்கு தீமை ஏற்படும் என்பதை எடுத்துக் கூறி குழந்தைகளை பொய் பேசுவதை தவிர்த்து விடும்படி அறிவுரை கூறலாம்.
எனினும் பெரும்பாலான குழந்தைகள் பயத்தின் வெளிப்பாடாகவே பொய்களை கூறுவார்கள். எனவே முதலில் பயத்தை போக்கி அவர்களது பிரச்சனையை சரி செய்து விட்டால் பொய் பேச மாட்டார்கள்.
சரளமாக பொய் பேசும் குழந்தைகளை நீங்கள் பக்குவமாக கையாள வேண்டும். அவர்களின் பயத்தை படிப்படியாக குறைந்து, பொய் பேசுவதால் ஏற்படும் தீமைகளை பகுத்து உணர்த்துவதின் மூலம் குழந்தைகள் பொய் பேச மாட்டார்கள்.
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை பெறுவதற்கு அவர்கள் குழந்தைகளோடு மிக நெருக்கமான முறையில் பழக வேண்டும். அப்போது குழந்தைகளுக்கு தேவையான நிறைகளை கற்றுத் தருவதோடு அவர்களின் நம்பிக்கையை வளர்ப்பதின் மூலம் பொய் பேசுவதை தவிர்த்து விடலாம்.
எந்த ஒரு செயலுக்கும் பொய் ஒரு நிரந்தர தீர்வை தராது என்பதை அவர்கள் உணரும் வகையில் கூறுவதோடு, பொய் கூறாமல் ஒரு விஷயத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தருவது அவசியமாகும்.