“நூறு ஆண்டுகள் பழமையான பாலம் அதுவும் ஊட்டியில்..!” – விவரம் தெரியுமா?
இன்று கட்டப்படக்கூடிய பாலங்கள் ஓர் இரு மாதங்களில் பழுதடைந்து விடுவதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம். ஆனால் நூறு ஆண்டுகள் மேலாகயும் ஊட்டி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் பழமையான பாலம் இன்று வரை உறுதியாக உள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும்.
மலைகளின் இளவரசியான தமிழ்நாட்டின் ஊட்டியை பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த சுற்றுலா தளம் அனைவரையும் கவரக்கூடிய தன்மையில் உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஊட்டியில், குன்னூர் சாலையில் மேட்டுப்பாளையம் அருகே தொட்டி பாலம் அல்லது கல்லார் பாலம் என்று அழைக்கப்படுகின்ற பாலமானது சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?
மேலும் இந்தப் பாலமானது 20 மீட்டர் வரை நீண்டது. இதை சிறப்பு என்னவென்றால் 20 மீட்டர் வரை எந்த ஒரு தூண்களும் பாலத்தை தாங்குவதற்கு அமைக்கப்படவில்லை.
இந்தப் பாலமானது 1923 ஆம் ஆண்டு கல்லாறு ஆற்றின் குறுக்கே மேட்டுப்பாளையத்தையும், குன்னூர் மற்றும் உதகமண்டலம் செல்லக்கூடிய பகுதியை இணைக்கும் படி கட்டப்பட்டது. இந்தத் தொங்கு பாலம் ஆனது மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து பல்வேறு இடங்களை இணைக்கிறது.
இந்த கல்லாறு பாலம் பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலத்தில் வாகனங்கள் செல்ல வசதியாக கட்டப்பட்டது. சுமார் 100 வருடங்கள் உறுதியாக இருக்கும் இந்த பாலம் இன்று வரை மிகச் சிறப்பாக மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
தற்போது இந்த பாலம் ஆனது கனரக வாகனங்களால் சேதம் ஏற்படும் என்ற நிலையில் சமீபத்தில் மூடப்பட்டது. இதனை அடுத்து இந்த பாலத்தை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு வசிக்கும் மக்கள் எழுப்பியுள்ளார்கள்.
மேலும் பாலத்தை பாதுகாக்க பாலத்தில் ஓவியம் வரைதல் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள கூறியிருக்கிறார்கள். இதை அடுத்து விரைவில் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்த பாலம் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் இருக்கிறார்கள்.
உங்களுக்கும் எந்த பாலம் பற்றிய வேறு ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் கட்டாயம் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு இதனை பாரம்பரிய பாலமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.