பார்டன் க்ரீக் குகை மாயன் நாகரீகத்தின் நுழைவாயிலா? – மறைந்திருக்கும் மர்மம் என்ன?
ஆளை சுண்டி இழுக்க கூடிய வகையில் அழகிய கடற்கரைகள் நிறைந்த இடமாக அமெரிக்காவின் பெலிஸ் என்ற இடத்தை கூறலாம். இந்த இடத்தில் நிறைய விஷயங்கள் அமானுஷ்யங்கள் நிறைந்து இருப்பதாக பலரும் கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் இங்கு காணப்படும் பார்டன் க்ரீக் குகை ஒரு ஆழமான அகன்ற காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது மேலும் இந்த குகையானது ஒரு புவியியல் அதிசயமாக தொல்பொருள் ஆய்வாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த குகை பற்றி பலவிதமான கதைகள் கூறப்பட்டு வருகின்ற நிலையில் மாயன் நாகரீகத்தில் வெளிப்பாடாக எந்த குகை இருக்கலாம் என்றும் அவர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடியது தான் இந்த குகை என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.
மேலும் இந்தக் குகை உங்களை கட்டாயம் மாயங்களின் உலகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய வகையில் உள்ளது இந்த மாயன் நாகரீகம் மெக்சிகோவின் பெரும் பகுதி அதாவது குவாதமாலா எனும் பெலிஸ் நாடுகளில் பரவி இருந்தது.
அந்தக் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு தொல்பொருள் துறையினர் இது பண்டைய மாயன் நாகரீகத்தோடு தொடர்புடையதாக உள்ளது என்ற கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் இந்த குகை பெஸிஸில் கயோ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த குகையின் சிறப்பு இது ஒரு பெரிய நிலத்தடி நதி குகையாக உள்ளதால் படகுகளில் பயணம் செய்து தான் புகையை பார்வையிட முடியும் குகைக்குள் செல்லும்போது ஒரு புதிய அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த இடத்தை மாயங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது குகைகளில் மனிதர்கள் பயன்படுத்திய பண்டைய கால மட்பாண்டங்கள் மற்றும் அதன் பல எச்சங்கள் காணப்படுகிறது அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் செய்த சில கலைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஆபரணங்கள் இதில் அடங்கும். எனவே எந்த பகுதியில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் மாயங்களின் பயன்பாட்டில் இருந்த பொருட்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறி உள்ளதால் இந்தப் பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்தப் பகுதியில் தொல்பொருள் ஆய்வுகளை தீவிரப்படுத்தும் அமானுஷ்ய பேச்சுக்களுக்கு முற்றுப்பொருளில் வைக்கப்பட்டு அங்கு மறைந்திருக்கும் உண்மை எளிதில் வெளிப்படும்.