“படுகர் இன சமூகத்தின் முதல் பெண் விமானி..!” – வெடிய போடுடா .. ஜெயஸ்ரீ அக்காவுக்கு..
இன்னும் சமுதாயத்தில் பெண்களை பக்கத்து மாவட்டத்திற்கு அனுப்பி படிக்க வைக்கவே தயங்கக்கூடிய பெற்றோர்கள் இருக்கக்கூடிய காலகட்டத்தில் விண்ணில் பறக்க கூடிய ஒரு விமானியாக திகழும் ஜெயஸ்ரீ பற்றிய சில தர தரவுகளை பார்ப்போம்.
திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டிலாக வேண்டிய வயதில் பெண்களுக்கு இவையெல்லாம் தேவையா? என்று போட்டி போட்டு கேட்கக்கூடிய காலகட்டம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது என்று தான் கூற வேண்டும்.
ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிய கூடிய வகையில் நீலகிரியில் இருக்கும் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பெண் விமானியாகி அளப்பரிய சாதனையை செய்திருக்கிறார்.
இவர் கோத்தகிரியில் உள்ள நெடுகுளா குருக்கத்தி முன்னாள் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த மணி என்பவரின் மகள் ஆவார். இவர் தென்னாபிரிக்காவில் விமான பயிற்சி பெற்ற படுகர் இன பெண் விமானி.
இதற்குக் காரணம் இவர்கள் பெற்றோர்கள் இவருக்கு கொடுத்த தைரியம் மற்றும் அவர்கள் மனதளவில் கொண்டு இருந்த உறுதி தான் தன்னை இந்த அளவு உயர்த்தி உள்ளது என்று ஜெயஸ்ரீ கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர் கோத்தகிரியில் தனியார் பள்ளியில் படித்தவர். தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவிட்டு சில காலம் ஐடி துறையில் பணியாற்று இருக்கிறார். பின்னர் தென்னாப்பிரிக்கா சென்று விமானி ஆவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார்.
விமானியாக மாறுவது ஊர் சுற்றக்கூடிய வேலை அல்ல. இதில் பல சிக்கல்களும், நுணுக்கங்களும் சவால்களும் உள்ளது. குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் மற்றும் மனநலப்பத்தி பரிசோதனை நடைபெறும். உடலில் உறுதியானவர்கள் மட்டுமல்லாமல், மனதளவிலும் தைரியமானவர்களே விமானியாக நீடிக்க முடியும்.
எனினும் சவால் நிறைந்த இந்தப் பணியை தேர்ந்தெடுக்க காரணம் தனது ஆசிரியர்களும் பெற்றோர்களும் தான் எனக் கூறியிருக்கும் எந்தப் பெண் படுகர் சமூகத்தில் முதல் பெண் விமானி என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
படுகர் இனத்தைச் சேர்ந்த இந்த பெண்ணின் சாதனையை Deep Talk Tamil குடும்பம் சார்பில் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இவரது இந்த வெற்றி பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருப்பதோடு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறது.
பெண்கள் அவர்கள் மனதில் நம்பிக்கை மற்றும் மன வலிமை இருக்கும் வகையில் மாற்றிக் கொண்டால் சிறகு விரித்து விண்ணில் பறக்கலாம் என்பதற்கு ஜெயஸ்ரீயை இனி உதாரணமாக கூறலாம்.