• December 13, 2024

 “வேண்டியதைத் தரும் பாதாள செம்பு முருகன் கோவில்..!” – நீங்களும் போங்க..

  “வேண்டியதைத் தரும் பாதாள செம்பு முருகன் கோவில்..!” – நீங்களும் போங்க..

Murugan

வேண்டியதை தரக்கூடிய கடவுள்களின் மத்தியில் பாதாள செம்பு முருகனை சக்தி அளப்பரியது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வேண்டியதை வினை நாழியில் தரக்கூடிய இந்த பாதாள செம்பு முருகன் கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்திருக்கும். இந்த கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. மேலும் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால் தான் இதனை பாதாள செம்பு முருகன் கோயில் என்று அழைக்கிறார்கள்.

Murugan
Murugan

இங்கிருக்கும் முருகன் செம்பினால் செய்யப்பட்டிருப்பதாலும், பூமியின் அடியில் இருப்பதாலும் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. பாதாளத்தில் இரண்டு கருவறைகள் கொண்டதாக இந்தக் கோயில் உள்ளது.

இந்த முருகனை தரிசிக்க நீங்கள் 18 படிகளை கடந்து கீழே இறங்கி சென்று தான் செம்பில் செய்யப்பட்ட முருகனை தரிசிக்க முடியும். இந்த முருகனை போகர் சித்தரின் மறு அவதாரமாக தான் நினைக்கிறார்கள்.

மேலும் போகரையும், அவருடைய சீடர் புலிப்பாணியும் குருவாக போதித்த திருக்கோவிலூர் சித்தர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ராமலிங்கம் பட்டியில் வசித்து இருக்கிறார்.

Murugan
Murugan

இவர் தான் ஒன்றரை அடி உயரத்தில் முருகன் சிலையை உலோகத்தில் வடிவமைத்து, பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்திருக்கிறார். நாளடைவில் வழிபாடு இல்லாமல் போன இந்த ஆலயம் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாஸ்கர சேதுபதி வம்சா வழியைச் சேர்ந்த கந்தமாறன் என்ற மிராசுதார் சீர் செய்து பூஜைகள் நடைபெற வழி செய்தார்.

இந்த செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட முருகன் பாதாள கருவறையில் நின்ற கோலத்தில், வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் வேல்லையும் ஏந்தி காட்சியளிக்கிறார். கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமான சங்கிலிக் கருப்புசாமி 15 அடி உயரத்தோடு காட்சி அளிப்பது பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும்.

இந்தக் கோவிலின் சிறப்பு எங்கு அணிவிக்கப்படும் கருங்காலி மாலைகள் முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அளிக்கப்படும். மேலும் கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட வேல், சந்தன வேல் ஆகியவற்றை இந்த முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

Murugan
Murugan

இந்த முருகனை வழிபடுவதின் மூலம் இந்த கருங்காலி மாலைகளை அணிவதின் மூலம் உங்களுக்கு திருமண தடை, உங்கள் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகள் போன்றவை விலகும். குழந்தை செல்வம் கிட்டும். ராகு, கேது செவ்வாயால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் மன அழுத்தம் மன இறுக்கம் குறைந்து இரத்த அழுத்தம் சீராகும். இங்கு பிரசாதமாக பூஜை செய்யப்பட்ட நெல்லிக்காய் பக்தர்களுக்கு வழங்கப்படுவது சிறப்பான ஒன்றாகும்.

எனவே நீங்களும் வாழ்க்கையில் எல்லாவிதமான வளமும் நலமும் பெறுவதற்காக ஒரு முறையாவது இந்த பாதாள முருகனை தரிசித்து வாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு முருக வேல் எப்போதும் உங்கள் வாழ்க்கைக்கு துணையாக நிற்கும்.