“அடி தூள் இந்தியாவை அடுத்து ஸ்லிம் விண்கலம்..!” – நிலவுக்கு அனுப்பிய ஜப்பான்..
நிலவு எங்கே போனாலும் பின்னால் வாராத என்ற பாடல் வரிகளை தகர்க்கக் கூடிய வகையில் நிலவை நோக்கிய பயணம். அடுத்தடுத்து நிலவை நோக்கி உலக நாடுகள் தங்களது பார்வையை திருப்பி உள்ளது இதற்கு காரணம் என்ன தெரியுமா? இது வரை நிலவில் கால் பதித்த நாடுகளில் இந்தியாவிற்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
இதற்குக் காரணம் உலகில் இதுவரை வேறு எந்த நாடுகளும் செய்யாத அளப்பரிய செயலை இந்தியா செய்துள்ளது. அதுவும் விண்வெளி துறையில் நிலவில் இதுவரை யாரும் சொல்லாத இடத்தில் சந்திரயான் 3 ஐ செலுத்தி உலக நாடுகளின் மத்தியில் தன்னை உயர்த்திக் கொண்டது.
இதனை அடுத்து உலக நாடுகள் பல தற்போது நிலவில் ஆய்வு செய்ய பலவிதமான விண்கலன்களை ஏவக்கூடிய முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதனை அடுத்து நிலவுக்கு ஜப்பான் ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டு இருந்தது.
மேலும் இந்த விண்கலத்தை ஏவுவதற்கு உரிய சூழ்நிலையை எதிர்பார்த்து இருந்த ஜப்பானுக்கு மோசமான வானிலை காரணமாக கடந்த வாரம் ஸ்லிம் விண்கலத்தை ஏவ கூடிய சூழ்நிலை அமையவில்லை. மேலும் மொத்தம் மூன்று ஜப்பான் ஸ்லிப் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது சற்று ஒத்தி வைக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்தியாவை தொடர்ந்து நிலவில் கால் பதிக்கக்கூடிய ஐந்தாவது நாடாக ஜப்பான் இருக்கும். இன்று இந்த ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது.
இந்த விண்கலமானது நிலவில் இருக்கும் பாறைகளை ஆராய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று அந்த நாடு தெரிவித்துள்ளது. சுமார் நான்கு அல்லது ஆறு மாதத்தில் நிலவை இந்த ஸ்லிம் விண்கலம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து ஜப்பானிய மக்களால் பெரிதளவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த விண்கலம் நிலவில் சாதிக்குமா? என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும்.
பல்வேறு வகைகளில் போட்டி போட்டு வரும் உலக நாடுகள் தற்போது விண்வெளி துறைகளும் கடும் போட்டோ போட்டி போட்டுக்கொண்டு விண்கலங்களை விண்ணில் ஏவி மனிதர்கள் வாழ்வதற்கு உரிய சூழ்நிலைகள் அங்கு நிலவி வருகிறதா? என்பதை படு தீவிரமாக ஆய்வு செய்ய இறங்கி இருக்கிறார்கள்.
எனவே மனிதன் நிலவில் வாழ்வதற்குரிய காரணிகள் இருக்கும் பட்சத்தில் விரைவில் நிலவில் கூட குடியேற்றங்கள் அமையும் என கூறலாம். எனவே நிலவை நோக்கி படையெடுக்கக்கூடிய காலகட்டம் விரைவில் ஏற்படும் என்று கூட கூறலாம்.