• December 5, 2024

அமெரிக்காவில் இருக்கும் மாகாணப் பெயரில் ஒர் ஆங்கில எழுத்து இல்லையா? அட அப்படி என்ன எழுத்து..

 அமெரிக்காவில் இருக்கும் மாகாணப் பெயரில் ஒர் ஆங்கில எழுத்து இல்லையா? அட அப்படி என்ன எழுத்து..

America

உலக அளவில் பிரிட்டிஷாரின் காலணி ஆதிக்கத்தின் காரணமாக பல நாடுகளில் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆங்கிலம் பேசுபவர்களை இரண்டு வகையாக பிரித்தார்கள். அது அமெரிக்க ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய ஆங்கிலம் என கூறலாம்.

அமெரிக்க ஆங்கிலத்திற்கும், ஐரோப்பிய ஆங்கிலத்திற்கும் ஒரு சிறு வேறுபாடுகள் மட்டுமே காணப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் 50 மாகாணங்களில் காணப்படும் பெயர்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்தாத ஒற்றை சொல் ஒன்று உள்ளது.

America
America

அமெரிக்காவில் இருக்கக்கூடிய மாகாணங்களில் பெயர்கள் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த பெயர்களில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து இல்லை என்ற ஆச்சரியமான தகவல்களை அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள்.

மேலும் அமெரிக்காவில் அதிகமாக பேசப்படும் மொழியான ஆங்கிலம் சுமார் 1452 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆங்கில மொழியானது உலகில் பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.

ஆங்கில மொழி பயன்பாட்டுக்கு அடுத்தபடியாக சீன மொழியை தான் உலகில் அதிகமாக பேசி வருகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் இருப்பது வெறும் 26 எழுத்துக்கள் மட்டும் தான். இந்த 26 எழுத்துக்களை வைத்து தான் பல வார்த்தைகள் உருவாகிறது.

America
America

மேலும் உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இருக்கும் மாகாணங்களில் பெயர்களில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் இடம் பிடிக்கவில்லை.

இங்கு சுமார் 50 மாகாணங்கள் உள்ளது. இந்த மாகாணங்களில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் இல்லாமல், அந்த மாகாணத்தின் பெயர்கள் அமைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரணமாக ஆங்கிலத்தைப் பொறுத்த வரை Z அல்லது X என்ற எழுத்து அரிதாக பயன்படுத்தக்கூடிய எழுத்துக்களாக ஆங்கிலத்தில் உள்ளது. இந்த எழுத்துக்கள் கூட அங்கு இருக்கும் மாகாணங்களின் பெயர்களில் காணப்படுகிறது. உதாரணமாக Arizona, Mexico, New Jersey போன்றவற்றை கூறலாம்.

America
America

எனினும் Q என்ற எழுத்து மட்டும் 50 மாகாணங்களில் பெயர்களில் காணப்படவில்லை. அதுபோல B,F,P போன்ற எழுத்துக்கள் ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும் இந்த செய்தியானது ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய செய்தியாக உள்ளது. இதுபோன்ற வித்தியாசமான தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.