நீங்க தலைவர் ஆவதற்கு முதல் படி..! இத படிங்க பாஸ்..
தலைமை தாங்குவதற்கு நீங்கள் சரியான நபரா? என்பதை நீங்கள் முதலில் ஒரு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்பு நீங்கள் தலைவர் ஆக விரும்பினால் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டாம்.
அந்த பதவிக்கு நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு தயாராகும் வகையில் உங்களது தொடர்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவையான பாதையை அமைக்கவும், உங்களது திறமையை நிரூபிக்கவும், உங்களுக்கு பல வழிகள் இருக்கும் போது உங்களது நிலை சற்று இறங்கினால் கூட நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம்.
உங்களால் செய்ய முடியும் என்று நினைக்கக் கூடிய விஷயங்களை மட்டுமே உங்கள் இலக்கை வைத்துக்கொண்டு, அதை நோக்கி தொடர்ந்து பயணப்பட வேண்டும்.
நீங்கள் உங்கள் இலக்கை அடையும் போது அதை பலர் பார்த்து உங்களை அவர்களாகவே தலைவராக ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு உங்களுடைய வளர்ச்சி உச்சத்தை நோக்கி இருக்க வேண்டும்.
அதற்காக நீங்கள் எப்பொழுதுமே உழைக்கவேண்டும். உழைப்பு மட்டும் போதாது, உழைப்புடன் சரியான வழியில் திட்டமிட்டால் மட்டுமே ஒன்றில் நாம் வெற்றியடைய முடியும்.
அந்த திட்டமிடல் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு தலைவராக கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். இதனுடன் அடிப்படை பண்புகளையும் நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்களைப் போல சிறந்த ஒரு தலைவர் இல்லை என்று கூறும் படி தான் உங்களை வளர்ச்சி அமையும்.
நாம் எந்தத் துறையில் இருந்தாலும், எத்தகைய பணியில் இருந்தாலும் நாம் அதை சீரும் சிறப்புமாக செய்ய வேண்டுமென்றால் புதிது புதிதாக ஒவ்வொரு நாளும் மாணவர்களைப் போல் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
யார் என்ன சொன்னாலும், எதைப் பற்றிப் பேசினாலும் கவலைப்பட கூடாது. அவர்கள் கூறுகின்ற அத்துணை பேச்சுக்களையும், நீங்கள் உங்களுக்கு படிக்கற்களாக எடுத்துக்கொண்டாலே போதும் வளர்ச்சி உங்களை நோக்கி வரும்.
என்ன செய்துள்ளீர்கள், எப்படி செய்துள்ளீர்கள் அதில் எது சரி, எது தவறு போன்ற பெறுவதின் மூலம் உங்களின் செயல் திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். தவறுகளை திருத்திக் கொள்ளலாம். சீரிய செயல் நோக்கி செயல்படலாம்.