இச்சாசக்தி..! – அட இவ்வளவு விஷயங்கள் இருக்கா…
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று சக்திகளை மூன்று வகையாக பிரித்து பக்குவமாக இந்து மதம் இன்றைய அறிவியல் கூட உணர்த்த முடியாததை மனிதர்களுக்கு பக்குவமாக உணர்த்தி உள்ளது.
அந்த வகையில் இச்சா சக்தி என்றால் என்ன? இந்த சக்தியால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது? இந்த சக்தியை கொண்டு என்ன செய்யலாம்? இதனால் மனித இனத்திற்கு என்ன பயன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரைகள் தெளிவாக பார்க்கலாம்.
இச்சை என்ற சொல்லுக்கு ஆசை மற்றும் விருப்பத்தின் சக்தி என்ற பொருள் உள்ளது. ஆனால் வேதத்தில் எந்த ஒரு இடத்திலும் இச்சா என்ற சொல் காணப்படவில்லை அதற்கு பதிலாக இந்த அர்த்தத்தை வெளிப்படுத்தக்கூடிய காமா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பரம சக்தியின் இச்சா சக்தி தான் இந்த பிரபஞ்சத்தையும் இதில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களையும் உருவாக்கி உள்ளது என கூறலாம். மேலும் சிவன் சித்தர் சக்தி, ஆனந்த சக்தி இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கரியா சக்தி ஆகிய ஐந்து ஆற்றல்களை கொண்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இச்சை என்றால் விருப்பம் என்ற ஒரு பொருளும் உண்டு. உங்களுக்கு விருப்பமான பொருளை அடைவதற்கு நீங்கள் ஆசை ,ஞானம், அறிவு, புத்தி, கூர்மை ஆகியவற்றைப் பெற உங்களுக்கு ஆசை இருக்க வேண்டும். அதை ஏற்படுத்தக் கூடிய சக்தியை எந்த இச்சா சக்தி கொடுக்கிறது.
பார்வதி தேவியார் எடுத்த மூன்று அவதாரங்கள் தான் இந்த இச்சா, கிரியா, ஞான சக்திகள் என்று புராணக் கதைகளும் பல உள்ளது. மேலும் இச்சையாக அதாவது விருப்பத்தோடு நீங்கள் எதிலும் பணி செய்யும் போது நிச்சயம் வெற்றிக்கிட்டும்.
இந்த செயலை குறிக்கத்தான் நவராத்திரி விழா மிகச்சிறப்பாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் மூன்று, மூன்று நாட்கள் ஒவ்வொரு சக்திக்கும் அதாவது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என சரஸ்வதி லட்சுமி துர்கா தேவி நாம் வழிபாடு செய்கிறோம்.
நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு இச்சா சக்தி மிகவும் அவசியம். நீங்கள் கொண்ட விருப்பத்தை சரியான இலக்கை செலுத்த உங்களை ஊக்கப்படுத்த கூடிய கிரியா சக்தி உங்கள் வெற்றிகளை உறுதி செய்ய உதவும். ஞான சக்தி மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற இந்து மதம் வகுத்து தந்த பாதை மிகவும் சிறப்பானது.
இந்து சமயம் பகிர்ந்ததைப் போல வேறு எந்த சமயமும் இதுபோல கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறதா? என்றால் அது சந்தேகமானது தான் இப்போது உங்களுக்கு இச்சா சக்தி பற்றி மிகத் தெளிவாகப் புரிந்து இருக்கும்.