• December 22, 2024

“உலகில் மிக பெரிய புத்தர் கோவில் எதற்கு அடியில் கிடந்தது..? –  அதிர்ச்சிகரமான தகவல்..

 “உலகில் மிக பெரிய புத்தர் கோவில் எதற்கு அடியில் கிடந்தது..? –  அதிர்ச்சிகரமான தகவல்..

Borobudur Temple

உலகின் மிகப்பெரிய புத்தர் கோவிலானது இந்தோனேசியாவின் சென்ட்ரல் ஜாவா மாகாணத்தில் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த புத்தர் கோவில் போரோபுதூர் (Borobudur Temple) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.

வரலாற்று ஆவணத்தின் படி இந்த புத்தர் கோயில் கிபி 778 க்கும் 850 க்கும் இடைப்பட்ட காலத்தை கட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மிக உயரமான மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயில் மகாயான புத்த கோயில் என கூறலாம்.

Borobudur Temple
Borobudur Temple

இந்த கோவிலானது மொத்த யாத்திரிகர்களுக்கும், சாகசம் விரும்பிகளுக்கும் மிகவும் விருப்பமான இடமாக இருந்திருக்கலாம். 1970களில் யுனெஸ்கோ உதவியுடன் இந்தக் கோயில் மீட்டெடுக்கப்பட்டது, என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அட.. அது எப்படி மீட்டெடுக்கப்பட்டது என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கோயில் ஆனது வட்டமான பரப்பில் 72 திறந்தவெளி ஸ்தூபிகளால் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்தூபிக்கிலும் மிக நேர்த்தியான முறையில் புத்தரின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புத்த மதத்தை உலகிற்கு காட்டக்கூடிய வகையில் அமைந்திருந்த கோயில் எரிமலை சாம்பலில் பல ஆண்டுகளாக புதைந்து கிடந்தது என்றால் உங்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆனால் அது உண்மைதான்.

Borobudur Temple
Borobudur Temple

இந்தக் கோயிலை தாமஸ்ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் என்ற ஆங்கிலேய லேப்டினண்ட் கவர்னர் 1814 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த கோவிலை கண்டறிந்தார். அதனை அடுத்து அகழ்வாரையும் செய்யும் பணிகளை 1907ஆம் ஆண்டு மேற்கொண்டார்கள்.

இந்த  அகழ்வாய்வின் போது கோவிலின் முதலாவது அடிவாரத்தில் உள்ள 115 அடி உயரப்பிரமாண்டமான ஸ்தூபி கண்ணில் பட்டது. இதனை அடுத்து கோவில் முழுவதும் 2 லட்சம் கன சதுர அடியில் எரிமலை சாம்பல் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் உள்ள ஒன்பது அடுக்குகளை சுற்றி பார்க்கும் போது தான் எந்த இடத்தைப் பற்றிய ஒரு முழுமையான அமைப்பு உங்களுக்கு தெரிய வரும். மேலும் ஒவ்வொரு அடுக்காக நடந்தால் ஐந்து கிலோமீட்டர் தாண்டி நீங்கள் கோயிலின் உச்சிக்கு செல்ல முடியும்.

Borobudur Temple
Borobudur Temple

கோயிலை தற்போது சுற்றிப் பார்க்க சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது அடிவாரத்தில் தொடங்கி அலங்கார தகடுகள் வழியாக செதுக்கப்பட்ட கற்களையும் புத்த சிலைகளையும் நோக்கி நாம் பாதையில் நடந்து செல்ல வேண்டும்.

அப்படி சென்றீர்கள் என்றால் உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையை காண முடியும்.