ஆதித்யா L 1 திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி..!” – நிகர் ஷாஜி..
நேற்று விண்ணில் வெற்றி கரமாக சீறிப்பாய்ந்த ஆதித்யா L1 விண்கலமானது சூரியனை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழச்சி தான் நிகர் ஷாஜி.
ஏற்கனவே சந்திர மண்டலத்தின் தென் துருவத்தை அடைந்து உலக அரங்கில் வரலாறு படைத்த இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தில் இந்த சந்திராயான் 3 மிஷினில் பணியாற்றியவர்கள் தமிழர்கள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
அந்த வரிசையில் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா L1 மிஷினில் 59 வயதாகும் நிகர் சார்ஜர் பணியாற்றி இருக்கிறார். அதுவும் தலைமை திட்ட அதிகாரியாக என்றால் அது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
செங்கோட்டையில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆங்கில வழியில் பயின்று இருக்கிறார். திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்.
இதனை அடுத்து பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் தனது மேல்படிப்பை முடித்துவிட்டு, 1987 ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணிபுரிய ஆரம்பித்தவர். தற்போது பெங்களூருவில் தனது அம்மா, மகளுடன் வசித்து வருகிறார். இவரது குடும்பமே ஒரு அறிவியல் குடும்பம் தான்.
இவரது கணவர் வளைகுடா நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மகன் என்ஜினியராக நெதர்லாந்தில் பணியாற்றுகிறார். இவரும் பணி நிமித்தமாக பல உலக நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு பல்வேறு வகையான விஞ்ஞானிகளுடன் வேலை செய்துள்ளார். தற்போது ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குனராக இவர் இருக்கிறார்.
இதனை அடுத்து தமிழர்கள் இஸ்ரோவில் அளப்பரிய பணியை செய்து வருகிறார்கள் என்று கூறும் அளவிற்கு நிலவை, அடுத்து சூரிய கோள்களை ஆய்வு செய்யும் திட்டத்திலும் தமிழர்களின் அறிவும் ஆற்றலும் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பண்டைய தமிழர்கள் எப்படி விண்வெளி தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் ஆக்கம் செலுத்தினார்களோ, அது போல இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் விண்வெளி துறையில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் வெற்றி மேல் வெற்றி நமது இந்திய திருநாட்டிற்கும் கிடைத்துள்ளது.
சந்திரயான் மூன்று போல ஆதித்யா L1 திட்டமும் வெற்றி அடைந்தால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு மென் மேலும் அதிகரிக்கும் என்பது மட்டுமல்லாமல் சூரியன் பற்றிய மேலும் பல சுவாரசியமான தகவல்கள் நமக்கு கிடைக்கும்.