இணையே இல்லாமல் முட்டையிட்ட முதல் முதலை..!”- வியப்பில் விஞ்ஞானிகள்..
மூட்டையிட்டு குஞ்சு பொரிக்க கூடிய அனைத்து வகையான விலங்குகளும் ஆண் இணையோடு சேர்ந்துதான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் என்று இதுவரை ஆய்வாளர்கள் நம்பி இருந்தார்கள். அந்த நம்பிக்கையை தகர்க்க கூடிய வகையில் சுயமாக இனப்பெருக்கம் செய்த முதலை பற்றி தான் எந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளோம்.
கோஸ்ட்டரிக்காவில் சுமார் 16 ஆண்டுகள் ஆண் துணை இல்லாத முதலை ஒன்று முட்டையிட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தாயின் மரபியல் அம்சத்தோடு வளர்ச்சி அடைந்த கருவாக உள்ளது என்பதால் இதன் மூலம் விஞ்ஞானிகள் வியப்பாகி விட்டார்கள்.
முதலைகளின் முன்னோர்கள் என்று அழைக்கப்படக்கூடிய டைனோசர்கள் ஒரு காலத்தில் ஆணின் துணை இல்லாமல் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மேலும் இவ்வகை இனப்பெருக்கத்தை சுய இனப்பெருக்கம் அதாவது Facultative Parthenogenesis என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வானது ஆண் இனத்தின் விந்தணு துணையில்லாமல் முட்டை கரு உருவதை குறிக்கிறது.க்ராக்கடிலஸ் அக்யூக்கஸ் Croccodylus Acucus என்ற இரண்டு வயது முதலையானது வனவிலங்கு சாலைக்கு கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் தனிமையில் உள்ளது.
இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு முதலை வாழும் இடத்திலிருந்து 14 முட்டைகளை அதன் ஊழியர்கள் கண்டுபிடித்தார்கள். ஆனால் இவற்றில் எவையும் பொரியவில்லை. மேலும் ஒரு முட்டை மட்டும் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து கருவில் இருந்த உயிரின் இதய திசுக்களை தாயின் ஓட்டில் உள்ள செல்களோடு ஒப்பிட்டு மறதியில் வீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் கருவில் இருந்த சிசு தாயைப் போலவே 99.9% இந்த கரு உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு ஆய்வாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
எந்த ஒரு உயிரினமும் சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழும் போது இணையில்லாத நிலை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு ஆளாகிறது. அப்போது சுய இனப்பெருக்கம் இதுபோல அரிதாக நிகழும் என்று விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இது போன்ற புதிதான அரிய தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.