“மனுநீதி மனிதர்களுக்கு மனித தர்மத்தை கற்றுக் கொடுக்கும் பொக்கிஷம்..!”- மனுவின் வகுத்தபடி வாழுதல் சிறப்பு..
ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்து கொள்வார்கள். அந்த விதிமுறைகளை பின்பற்றி வாழ்வதின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நன்மைகள் பல ஏற்படும். அப்படிப்பட்ட விதிகளை பிரம்மன் வழங்கியதாக கருதப்படுகிறது. அந்த விதிகளை தான் மனு தர்மம் எடுத்து இயம்புகிறது.
அப்படிப்பட்ட மனிதன் தேவையான கருத்துக்களை கூறுகின்ற மனு தர்மத்தைப் பற்றிய சில கருத்துக்களை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த மனுவின் படி வாழுதல் மூலம் மிகச் சிறப்பான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதர்களும் மேற்கொள்ள முடியும்.
ஒரு ஆண் இறைவனால் கொடுக்கப்படும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான் அது அவனுடைய தேர்வினால் நடப்பது அல்ல. எனவே எப்போதும் பெண்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். மேலும் பெண்களை எப்போதும் மதிக்க வேண்டும் அவர்கள் விரும்பும் அணிகலன்களை வாங்கித் தந்து கௌரவிக்க வேண்டும்.
பெண்களை மதிக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கூறியிருக்கும் மனுதர்மம் பெண்கள் இல்லாத இடத்தில் தெய்வங்கள் கூடி கொள்வதில்லை என்ற கருத்தை வலியுறுத்தி கூறுகிறது. பெண் இல்லாத வீடு விரைவில் அழிந்து போகும் என்ற நிலையையும் உணர்த்தி உள்ளது.
மேலும் ஒரு வீட்டின் ஒளி போன்றவள் பெண் அவளுக்கும் திருமகளுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளது. அவள் வீசும் புன்னகைக்காக அந்த வீடு காத்திருக்கும். அவள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்பு ஏற்படும் என்று கூறுகிறது.
பெண்ணின் சொல்லானது எப்போதும் தூய்மையானதாக இருக்கும். மகளுக்கும், மகனுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. இருவரும் ஒருவரே என்ற உயர்ந்த கருத்தை அன்றே விலக்கியுள்ளது.
எந்த ஒரு காலகட்டத்திலும் கணவனும், மனைவியும் பிரியக்கூடாது. இது பிரம்மன் போட்ட முடிச்சு என்பதை உணர்ந்து இருவரும் செயல்பட வேண்டும். கணவன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதே தர்மம் என்பதை கூறியுள்ளது.
எப்போதுமே தாய், தந்தை, மனைவி, மகன் அல்லது மகளை ஒருபோதும் ஒருவன் கைவிடக்கூடாது என்ற உயரிய லட்சியத்தை மிக அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறது.
மரணத்திற்குப் பிறகு நமது தாயோ, தந்தையோ, மனைவியோ, மகனோ, மகளோ நம்மோடு வருவதில்லை. ஏன் வேறு எந்த உறவுகளும் நம்மோடு வராது. எனவே ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை மனுநீதி சிறப்பாக கூறியுள்ளது.
உங்களது உடல் சுருங்கி தலைமுடி நரைக்கும் சமயத்தில் உங்கள் பேரப்பிள்ளைகளைக் கண்டுவிட்டால், நீங்கள் வனவாசத்திற்கு தயாரானவர்கள் என்பதை உணர்ந்து அதற்கான வழியை நோக்கி செல்ல வேண்டும்.
தியானம் செய்யும் அந்தணத் துறவியை அவமானப் படுத்தக் கூடாது. அவர்களிடம் சாபம் பெற்றால் நாம் சேர்க்க வைத்த தர்மங்கள் அனைத்தும் கரைந்து போகும். இதனால் நமது ஆயுளும் குறைந்துவிடும். தர்மம் தலைகாக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
பொய் புரளி பேசுவதை தவிர்த்து விடுங்கள் அவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றங்களாகும். அளவோடு வளமான வார்த்தைகளை பேச வேண்டும். உடல் சுத்தம் நீரில் அமைவது போல மன சுத்தமானது நாம் பேசும் தூய வார்த்தைகளால் அமைகிறது என்பதை புரிந்து கொண்டால் தான் வாழ்க்கை முழுமை அடையும்.
மறுபிறவி எடுக்க விரும்புபவர்கள் யாரும் பூண்டு, வெங்காயம் மற்றும் காளான்களை உண்ணக்கூடாது. நீரும், நெருப்பும் ஒன்றாக இணைந்து தான் தங்கத்தையும், வெள்ளியையும் உருவாக்க உதவுகிறது. இந்த வழிமுறைகளை நாம் பின்பற்றினால் தூய்மையாக வாழலாம்.
குடிப்பழக்கம் ஒருவரை பலவிதமாக பாதிக்கும் என்பதால் எந்த சமயத்திலும் மது அருந்தக் கூடாது. எந்த ஒரு அரசனும் நாள்தோறும் வேதத்தை கற்றுத்தரும் அந்தணர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
எல்லா அரசர்களும் தங்களது உணர்ச்சிகளையும் உறுப்புக்களையும் கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் புலன் அடக்கி ஆண்டாள் மட்டுமே தனது குடிமக்களை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.