• November 22, 2024

“கொங்கு மக்களுக்கு விதிக்கப்பட்ட திமிர் வரி..!”. – பிரிட்டி அரசுக்கு டின் கட்டிய கோவை மக்கள்..

 “கொங்கு மக்களுக்கு விதிக்கப்பட்ட திமிர் வரி..!”. – பிரிட்டி அரசுக்கு டின் கட்டிய கோவை மக்கள்..

coimbatore

கொங்கு தமிழ் பேசும் கோவை மக்களின் தமிழை அனைவரும் ரசித்துப் கேட்பார்கள். மரியாதைக்கு பெயர் பெற்ற ஊரான கோவை ஆங்கில ஏகாதிபத்தியத்தை, திணற வைத்தவர்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஆங்கில அரசு பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆங்கில அரசை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக பல பகுதிகளில் இருந்த மக்கள் போராடி உயிர் தியாகம் செய்துதான் இந்த சுதந்திரத்தை பெற்றெடுக்கிறோம்.

coimbatore
coimbatore

அப்படி சுதந்திரத்திற்காக போராடியவர்களின் லிஸ்ட்டை பார்க்கும்போது கோவையைச் சார்ந்த நபர்களின் பெயர் சற்று குறைவாகத்தான் இருக்கும். எனினும் கோவை பகுதியில் குறிப்பாக சூலூரில் நடந்த சூலூர் ரயில் எரிப்பு மற்றும் சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு போன்ற சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

மேலும் ஆங்கில ஆட்சியில் எண்ணற்ற விதி வரிகளை போட்டு நமது மக்களை கஷ்டப்படுத்திய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் உதாரணமாக உப்பு வரி, ஓபிய வரி, கஸ்டம்ஸ் வரி என்று வகை வகையாக வரி விதித்து நமது மக்களை சித்தரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

அது போல ஆங்கிலேயர்கள் கோவை மக்களுக்கு திமிர் வரி என்ற வரியை விதித்த வரலாற்றைப் பார்க்கும்போது உங்களுக்கு சற்று மிரட்சி ஏற்படும். இந்த வரி எதற்காக விதிக்கப்பட்டது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

coimbatore
coimbatore

சுதந்திர போராட்ட சமயத்தில் சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு மற்றும் சூலூர் விமானத்தலை எரிப்பு போராட்டங்கள் நடந்தேறியது. இந்த சமயத்தில் தான் செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்தோடு வெள்ளையனை வெளியேறு இயக்கத்தை  ஒண்டிப்புதூர் பகுதியில் நடத்தினார்கள்.

அது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியிலிருந்து கொண்டு செல்லக்கூடிய ராணுவ தளவாடங்களை சூலூர் பகுதி வழியாக கொண்டு செல்லாமல் இருக்க  ரயில் நிலையத்தை கவிழ்த்தும், விமான நிலையத்தை கொளுத்துவது என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். இதற்கு என தனி தனி குழுக்களையும் அமைத்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் ஊட்டியில் இருந்து அரவங்காடு ராணுவ தொழிற்சாலையில் இருந்து போர் கருவிகளோடு ரயில் போத்தனூர் வழியாக ஈரோடு செல்ல இருப்பதாக போராழிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போராழிகள் ஆகஸ்ட் 13ஆம் தேதி நல் இரவு சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் ரயில் தளவாடங்கள் தகர்த்து ரயிலை கவிழ்த்தினார்கள். எனினும் உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை.

coimbatore
coimbatore

இந்த சம்பவத்தை அடுத்து கே வி ராமசாமி என்பவருக்கு ஆங்கில அரசு குறி வைத்தது. இவர் மீது ரயில் கவிப்பு செய்ததாக குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டு  சித்தரவதைக்கு ஆளானார்.

இதை எடுத்து திட்டமிட்டது போல சூலூரில் அமைந்திருந்த விமான தளத்தை தீயிக்கு இரையாக்கிய குற்றவாளிகள் யார்? யார்? என்பதை கண்டுபிடித்த ஆங்கில அரசு அவர்கள் மீது திமிர் வரியை விரித்தது. இந்த வரியை அவர்கள் 48 மணி நேரத்தில் கட்ட வேண்டும் என்ற கெடுபிடிகளையும் விரித்தது.

எனவே உலகிலேயே முதல் முதலாக திமிருக்கு என்று வரி விதிக்கப்பட்டது. கோவையில் இருக்கும் கண்ணாம்பாளையத்திற்கு தான் என்பது இதன் மூலம் ஊர்ஜிதம் ஆனது.