“நல்ல எண்ணங்கள் மகத்தான நல் வாழ்வை தரும்..!” – உயர்ந்த எண்ணம் கொள்..
எண்ணம் போல் வாழ்வு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்த சொற்றொடர் தான். நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ? அந்த மாற்றம் கண்டிப்பாக உங்களுள் ஏற்படும். இன்று உன் மனிதர்களின் எண்ணங்கள் பல வகையான சிந்தனைகளோடு உள்ளது.
நீங்கள் உங்கள் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இறுக்கமான மனநிலையையும், இயந்திரத்தனமான செயல்முறையையும், விட்டு சற்று விலகி இருந்தால் நிச்சயம் உங்கள் எண்ண குவியல்களில் நல்ல சிந்தனைகள் ஓட ஆரம்பிக்கும்.
உங்களைப் போல இருக்கும் சக மனிதனைப் பார்த்து நீங்கள் மகிழ வேண்டும். உங்கள் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்வதின் மூலம் உங்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்த நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனின் சிந்தனை ஓட்டம் வேறு, வேறு விதமாக இருக்கும். இந்த எண்ண ஓட்டம் தவறாக மாறாமல் இருக்க வாழ்வியல் நெறிகளை மறக்காமல் நாம் கடைபிடிப்பது அவசியமாகும். இவை மனிதனின் நடத்தைக்கு பக்க பலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் எண்ணங்களை நேர்மறையாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது.
உங்கள் எண்ணங்களை தான் எப்போதும் செயல்கள் பிரதிபலிக்கும். எண்ணம் நல்ல எண்ணமாக இருக்கும் போது அதிலிருந்து வெளிப்படக்கூடிய செயல்களும் பலருக்கு பயன்படக்கூடிய வகையில் இருக்கும்.
உன்னை சுற்றி இருக்கக்கூடிய எல்லாவற்றையும் நீ ரசிக்க பழகிக் கொள்வதின் மூலம் எப்போதும் உன்னை சுற்றி மகிழ்ச்சியான எண்ண அலைகள் உருவாகும்.
எந்த ஒரு சமயத்திலும் எதற்காகவும் நீங்கள் கவலைப்படாமல் நமக்கு கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ அதை நோக்கி பயணம் செய்யும் போது நம்பிக்கையோடும் விடா முயற்சியோடு, ஊக்கத்தோடு நீங்கள் செயல்படும் போது உங்கள் எண்ண அலைகள் அதற்கு உறுதுணையாக இருக்கும்.
அதை விடுத்து விட்டு என்னால் முடியுமா? என்னால் இதை எப்படி சாதிக்க முடியும்? என்ற பலவிதமான எதிர்மறை கேள்விகளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டு அந்த செயலை செய்யும் போது அது கட்டாயம் சுழக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எண்ணுவதை சிறப்பாக எண்ணி சிறப்பான செயல்களை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் வாழ்க்கை வளமாக மாறும்.
உங்கள் வாழ்க்கையை நல்லதொரு வாழ்க்கையாக மாற்றக்கூடிய சக்தி உங்கள் எண்ணத்திற்கு உண்டு. எனவே நீங்கள் நல்லதை நினையுங்கள் நல்லதை செய்யுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.