மனச்சோர்வாக இருக்கும் சமயத்தில் அதை கடக்க சில எளிய வழிகள்..
இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு மனச்சோர்வு என்பது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இந்த மனச்சோர்வுக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்து பார்க்கும்போது பலவிதமான சூழ்நிலைகளை நாம் கூற முடியும். குறிப்பாக நீங்கள் தனிமையாக இருக்கக்கூடிய காலகட்டத்தில், அதிக அளவு பணிகளை செய்யக்கூடிய நேரத்தில், உறவுகளோடு இருக்கக்கூடிய காலகட்டத்தில் உங்களுக்கு இது போன்ற மன சோர்வுகள் ஏற்படலாம்.
மன சோர்வில் இருந்து வெளிவந்து இயல்பாக நீங்கள் இருக்க பல வழிகள் உள்ளது. அவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது மன சோகத்தை எளிதில் நீக்கி விட முடியும்.
மன சோர்வு இருக்கும் வரை உங்களால் எதையும் எளிதில் செய்ய முடியாது. எதையோ பறி கொடுத்தது போல் உங்களுக்குள் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் உங்களால் களம் இறங்கி முழுமையாக செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்.
மனச்சோர்வை நீக்க முதலில் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த கூடிய திறமை உங்களுக்கு இருக்க வேண்டு.ம் இதற்காக நீங்கள் தினமும் தியானம் செய்வது நல்லது. தியானத்தை மேற்கொள்வது மூலம் உங்களது உணர்வுகள் கற்றுக்கொள் வருவதோடு, மனநிலையும் ஒருமைப்படுத்தப்படும். இதன் மூலம் எளிதில் உங்கள் மனசோர்வு விலகிச் செல்லும்.
உங்களுக்குப் பிடித்தமான செயல்களில் நீங்கள் ஈடுபடுவதன் மூலம் மனச்சோர்வை நீக்கலாம் அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை விடுத்து வேறொரு இடத்திற்கு சென்று குதூகலமாக அந்த நாளை கழிப்பதின் மூலம் உங்கள் மனசோர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
எத்தகைய விஷயத்தையும் நீங்கள் எளிமையாக எடுத்துக் கொள்ளக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதின் மூலம் எல்லாவித சூழ்நிலையையும் நீங்கள் சுலபமாக நடத்திச் செல்லக்கூடிய தன்மை ஏற்படும். இதன் மூலம் உங்களுக்கு ஏற்படுகின்ற மனச்சோர்வு எளிதில் நீங்கும்.
திடீரென ஏற்படக்கூடிய கோபத்தை விடுத்து விட்டு, சிக்கல்கள் தரும் தீய வார்த்தைகளை பேசாமல், எல்லோரிடமும் என் முகத்தோடு நீங்கள் பழகும் போது மற்றவர்களால் உங்களுக்கு எந்த ஒரு சிக்கலும் ஏற்படாத நிலையில், மன அழுத்தம் இருக்காது. மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே உங்களுக்கு மன சோர்வு ஏற்படாது.
எப்போதும் உங்களை புதிதாக பிறந்த குழந்தையாக எண்ணிக் கொள்ளுங்கள். கஷ்டங்களைப் பற்றி சிந்தனைகளை அதிகமாக செய்யாதீர்கள். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். செய்கின்ற பணியை சிறப்பாக செய்தால் நாளைய பணியும் சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை விதையை உங்களுக்குள் விதைத்து விடுங்கள்.
இதன் மூலம் உங்களது மன அழுத்தமும், மனசோர்வும் விலகி ஓடும். நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய உலகம் மிகப் பெரியது. அதை கடந்து செல்ல என்ன செய்யலாம் என்பது போன்ற சிந்தனைகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கக் கூடிய வெறுப்புணர்வுகள் குறைந்து போகும்.
வாரத்தில் ஒரு நாள் உங்கள் நண்பர்களோடு கலந்து உங்கள் வாழ்வை குதூகலமாக்குங்கள். மனம் விட்டு எதையும் பேசுங்கள். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இவை அனைத்துமே உங்கள் மனசோர்வை நீக்கும் அற்புத சக்தி படைத்தது.