• September 8, 2024

தமிழக மக்களின் பொங்கல் போலவே, கேரள மக்களின் ஓணம்? ஓணம் பண்டிகை உண்மை வரலாறு என்ன?

 தமிழக மக்களின் பொங்கல் போலவே, கேரள மக்களின் ஓணம்? ஓணம் பண்டிகை உண்மை வரலாறு என்ன?

Onam

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொண்டாடப்படும் ஓனம் திருவிழா ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க பெருவிழா என்று கூறலாம். இந்த திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் மலையாளிகள் கொண்டாட கூடிய விழா தமிழகத்தில் இருக்கும் மலையாளிகளும் கொண்டாட கூடிய வகையில் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடப்பட உள்ளது.

தமிழக மக்களால் எப்படி பொங்கல் திருவிழா அறுவடை நாளாக கொண்டாடப்படுகிறதோ, அது போலவே கேரளாவின் அறுவடை திருநாளாக இந்த ஓணப்பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

Onam
Onam

கொல்ல வருடம் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோண நட்சத்திரம் வரை சுமார் 10 நாட்கள் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இந்த பண்டிகையை சீரும் சிறப்புமாக அவரவர் இல்லங்களில் கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை பற்றி சங்க கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளது. மேலும் விஷ்ணுவின் அவதாரமான வாமன அவதாரம் அவதரித்த திருநாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மலை நாடான கேரளாவை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்த மகாபலி சக்கரவர்த்தி ஒருமுறை யாகம் செய்யும் போது விஷ்ணு வாமன அவதாரத்தில் அந்த யாகசாலைக்கு வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் மூன்றடி மண் தருவதாக உறுதி கூறியதை அடுத்து, முதல் அடியாக நிலத்தையும் இரண்டாவது அடியாக வானத்தையு,ம் அளந்த பின் மூன்றாவது அடி எங்கே என்று கேட்க தனது தலையை தாழ்த்தி வைத்துக் கொள்ளும்படி மகாபலி சக்கரவர்த்தி கூறியதை அடுத்து மகாபலியை பாதாள லோகத்திற்கு தன் பாதத்தை வைத்து அழுத்தியதாக வரலாறு கூறுகிறது.

Onam
Onam

அடுத்து பாதாள லோகத்தை ஆட்சி செய்து வரும் மகாபலி வருடத்திற்கு ஒரு முறை தனது கேரள மக்களை காண வேண்டி அன்போடு, மகாவிஷ்ணுவுடன் வேண்டிக் கொண்டது படி ஒவ்வொரு திருவோண திருநாளும் வருடம் ஒரு முறை வரும் நிகழ்வை கொண்டாடப்படுவதாக கதைகள் உள்ளது.

அடுத்து கேரளா மக்கள் மகாபலியை வரவேற்க கூடிய வகையில் ஆண்டுதோறும் இந்த பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த பண்டிகையின் ஸ்பெஷல் உணவுகளை இன்று வரை பாரம்பரிய முறையில் செய்து பலரும் உண்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓண பண்டிகையில் சமைக்கப்படக்கூடிய உணவுகள் அறுசுவை நிரம்பியதாக இருக்கும். சுமார் 64 வகையான பண்டங்கள் இதில் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கசப்பு தவிர அனைத்து வகையான பண்டங்களும் இது அடங்கும்.

Onam
Onam

இந்தப் பண்டிகையின் போது புது அரிசி மாவில் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், அரிசி சாதம், பருப்பு, நெய் காளன், ஓவன்,தோறன், ரசம், மோர், இஞ்சி புளி, எரிசேரி, புளிசேரி, குழம்பு, பப்படம், ஊறுகாய், சீடை, வெல்ல பாயசம், பாயசம் வாழைப்பழம் நேந்திரம் சிப்ஸ் போன்றவை முக்கிய இடம் பிடிக்கும்.

அதுபோலவே ஓணம் பண்டிகையை அன்று மன்னனை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் அவர்கள் வீட்டின் வாசலில் போடப்படும் அத்தப்பூக்கோலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரே வகையான பூக்கள் முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என தொடர்ந்து பத்து நாட்களும் 10 வகையான பூக்களை கொண்டு வீட்டின் முன் பகுதியை அலங்காரம் செய்வார்கள். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதம் என்பதால் இந்த ஓணம் திருநாளை பூக்களை கொண்டு அலங்கரிக்கும் விழாவாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

Onam
Onam

பத்து நாட்களும் பெண்கள் கசவு என்று அழைக்கப்படக்கூடிய வெண்ணிற ஆடைகளை அணிந்து பாடல்களை பாடியும், ஆடியும் மகிழ்வார்கள்.மேலும் பலவிதமான போட்டிகள் இந்த நாட்களில் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படும். பாரம்பரிய நடனப் போட்டிகள் மாநிலம் எங்கும் நடக்கும்.

எனவே ஓணம் திருநாளை கொண்டாட இருக்கும் கேரளா மக்களுக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் கேரள மக்களுக்கும் Deep Talk Tamil  சார்பாக எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று, வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.