• November 22, 2024

 “சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த சர்வாதிகாரி முசோலினி..!” – கல்வியை கற்றுத்தந்த ஆசிரியரா?

  “சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த சர்வாதிகாரி முசோலினி..!” – கல்வியை கற்றுத்தந்த ஆசிரியரா?

Mussolini

உலகை அச்சுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்த படியாக முசோலினியை கூறலாம். சுமார் 21 ஆம் ஆண்டுகள் ஜெர்மனியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பலவிதமான அட்டூழியங்களையும் செய்து பலரது மனதையும் பதற வைத்த ஹிட்லரின் உற்ற நண்பர் தான் இந்த முசோலினி.

உலக வரலாற்றில் கறை படிந்த அந்த நாட்களை யாரும் மறக்க முடியாது ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முசோலினியை புரட்சிக்காரர்கள் கொலை செய்தார்கள். இந்த கொலை சாதாரணமாக நடந்த கொலை அல்ல.

கொலை செய்யப்பட்ட முசோலினி பலருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்தவர். இவரோடு சேர்த்து இவரது காதலியையும் சுட்டுக் கொன்று, இவர்களின் பிணங்களை விளக்கு கம்பத்தில் தலைகீழாக தொங்க விட்டார்கள்.

Mussolini
Mussolini

இத்தாலியில் மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற விதையை இவரது தந்தை முசோலினிக்கு ஊட்டினார் என்று கூறலாம். எனவே தான் இளமையிலேயே முசோலினி அரசியலில் ஈடுபட முடிந்தது.

பள்ளிப்படிப்பை முடித்த இவர் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார்.லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் புலமை பெற்றிருந்தார். தான் பார்த்தேன் ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு ராணுவத்தில் பணியாற்றினார்.

இதனை அடுத்து கம்யூனிஸ்ட் பத்திரிக்கை ஒன்றில் ஆசிரியராக மாறினார். இவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கியதின் காரணத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட இதனை அடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இவரை சிறை வாசலில் வரவேற்றார்கள்.

1914 ஆம் ஆண்டில் முதல் உலகப்போர் ஏற்பட்டது இந்த போரில் முசோலினி ராணுவத்தில் பணிபுரிந்து படுகாயம் அடைந்து பின்னர் ஊர் திரும்பினார். மேலும் இந்த போரில் ஆறு லட்சத்து 50 ஆயிரம் இத்தாலியர்கள் பலியானார்கள். சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததின் காரணத்தால் இத்தாலியின் பொருளாதாரமே சீர்குலைந்தது.

இந்த சூழ்நிலையில் தான் 1920 இல் பாசிஸ்டா கட்சியை முசோலினி துவங்கினார். இந்தக் கட்சி 1921 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி முசோலினிக்கு ஒரு பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை பெற்று தந்தது.

Mussolini
Mussolini

எதிர்க்கட்சி அணியில் இருந்த முசோலினி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய பேச்சுக்கள் அர்த்தம் தந்தது. ஊர், ஊராக சென்று பிரச்சாரங்கள் செய்து மக்களை உணர்த்தி ஆளும் கட்சிக்கு எதிராக செயல்பட வைத்தார்.

தன் பேச்சில் மக்கள் கட்டுண்டு கிடப்பதை உணர்ந்து கொண்ட முசோலினி ஒவ்வொரு ஊரிலும் அரசு அலுவலகங்களை கைப்பற்றி ரவுடிகளை அழைத்துச் சென்று படு பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவலர்களை தாக்கி ஊழியர்களை வீட்டுக்கு விரட்டி கஜானாவை கைப்பற்றினார்.

இதனை அடுத்து முசோலினியின் கருஞ்சட்டை படை 1922 இத்தாலியின் தலைநகரை பிடிக்கச் சென்று மிகப் பெரிய கலவரம் ஏற்பட்ட நிலையில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் அமைச்சரவையில் இருந்தவர்கள் ராஜினாமா செய்து ஆட்சி பொறுப்பை முசோலினியிடம் தந்தார்கள்.

மேலும் முசோலினியின் கையில் கொடுக்கப்பட்ட ஆட்சி பொறுப்பை சீராக வழியில் பயன்படுத்தாமல் இத்தாலியின் முன்னேற்றத்திற்கு என்ற ஒற்றை செல்லை கூறி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வாதிகாரத்தோடு செயல்பட்டான். தன்னை எதிர்த்தவர்களை கொலை செய்யவும் நாடு கடத்துவதையும் முக்கிய பணியாக செய்தான்.

Mussolini
Mussolini

எனினும் மக்களை கவருவதற்காக கொடுமைகள் பல செய்த முசோலினி அவர்களுக்கு விவசாயம் செய்ய எந்திர கலப்பைகளை வழங்குகளின் மூலம் உணவு உற்பத்தி பெருகியது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் மக்கள் வசதி பெருகியதால் மக்கள் அனைவரும் முசோலினியை ஆதரித்தார்கள் நிலைமை தனக்கு சாதகமாக இருந்தது காரணத்தால் தொட்டதில் எல்லாம் வெற்றி அடைந்தான்.

இதனை அடுத்து இத்தாலியில் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக முசோலினி திகழ ஆரம்பித்த 1933 ஜெர்மனியில் ஆட்சியை கைப்பற்றிய ஹிட்லரும், முசோலினியும் நண்பர்களாக மாறினார்கள். அத்தோடு இத்தாலி ராணுவத்தை மேம்படுத்த ஹிட்லர் உதவி புரிந்தார்.

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் ஹிட்லரும், முசோலினியும் கைகோர்த்துக் கொண்டார்கள். முதல் இவர்கள் இருவருக்குமே வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் தோல்வியை சந்திக்க ஆரம்பித்ததால் இத்தாலியின் மக்களிடம் முசோலினி செல்வாக்கை இழக்க ஆரம்பித்தார்.

முசோலினியை எதிர்க்கக் கூடிய புரட்சி இயக்கம் தோன்றியதால் இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கழகத்தில் ஈடுபட்டார்கள். எனவே இத்தாலியில் தன் காதலியோடு இருப்பது தனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்ட இவர் அண்டை நாட்டான ஸ்விஜர்லாண்டிக்கு டப்பியோட முடிவு செய்தார்.

Mussolini
Mussolini

எனினும் இந்தத் திட்டமானது தவிடு பொடியானது. புரட்சிக்காரர்களின் கைகளில் பிடிபட்ட முசோலினியும் அவரது காதலிக்கலாமா புரட்சிக்காரர்கள் மூலம் ஒரு காரில் அழைத்துச் செல்லப்பட்டு மலைப்பகுதியின் கீழ் இறங்கியதும் அவர்களை இறங்கச் சொன்னார்கள்.

இதனை அடுத்து தங்களை சுட்டுத் தள்ளப் போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட இவரது காதலி கிளாரா முதலில் தன்னை சுடும்படி கேட்டுக் கொண்டார். இவரின் வேண்டுகோளுக்கு இணங்க புரட்சிக்காரர்கள் இருவரது உடலையும் எந்திரத்து துப்பாக்கியால் துளைத்து எடுத்தார்கள். ரத்த வெள்ளத்தில் மிதந்த இவர்களை விளக்கு கம்பத்தில் தலைகீழாக தொங்க விட்டார்கள்.

அந்த தொங்க விட்ட பிணங்களை கூடியிருந்த மக்கள் கல்லால் அடித்தார்கள் என்றால் முசோலினியின் மீது எந்த அளவு வெறுப்பு இருந்திருக்கும் என்று பாருங்கள். மேலும் அவரை புதைப்பதற்கு முன்பு அவரது மண்டை ஓட்டை பிளந்து எடுத்து மூளையை ஆராய்ச்சி செய்ய கொண்டு சென்று விட்டார்கள் என்ற விஷயம் இன்று வரை கூறப்படுகிறது.