“கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் இறப்பு நிலை..!” – மருத்துவ சாதனை.. சாதித்த கிங் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவர்கள்..!
மருத்துவ உலகில் மகத்தான சாதனையை புரிந்து இருக்கக்கூடிய இந்திய மருத்துவர்கள், ஒரு நோயாளிக்கு கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் இறப்பு நிலையை கொடுத்து, உயிரை மீட்டெடுக்கும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
இந்த விஷயமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் 28 வயதை ஆன பெண்னை காப்பாற்றுவதற்காக நடந்துள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். மேலும் இது எப்படி சாத்தியம் என்ற கேள்விகளை உங்களுள் ஏற்படுத்தும்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இது ஒரு புதுமையான மருத்துவ முறை என்று கூறலாம். இந்த முறையை hypothermic circulatory arrest என கூறுவார்கள்.
இந்த முறையில் அந்தப் பெண் நோயாளியின் உடல் வெப்பநிலையை குறைத்து உடலை குளிர்வித்து சுமார் ஆறு நிமிடங்கள் இறப்பு நிலைக்கு கொண்டு சென்று, அறுவை சிகிச்சையை மேற்கொண்டு பின்பு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் இந்த பெண்ணுக்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்துள்ளது. மேலும் இதயத்தில் இரண்டு வால்வுகள் மாற்றிய நிலையில் திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற முறையை கையாண்டால் தான் இந்த பெண்ணை காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்த மருத்துவர்கள் இந்த மருத்துவர் முறையை கைப்பற்றி வெற்றி கொண்டிருக்கிறார்கள்.
அயோத்தியைச் சேர்ந்த வனிதா என்ற பெண்ணுக்கு இதயத்தில் இருக்கும் பெரு நாடியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பெருநாடி சூடோ அனுரிசம் நோய் கண்டுபிடிக்கப்பட்டு அந்த சிகிச்சைக்காக புதிதான முறையை கடைப்பிடித்து இருக்கக்கூடிய மருத்துவர்கள் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார்கள்.
இந்த பெருநாடி சூடோ அனுரிசம் சிகிச்சைக்காக இந்த பெண்ணின் உடல் வெப்ப நிலை படிப்படியாக குறைக்கப்பட்டு மூளையின் செயல் திறன் கண்காணிக்கப்பட்டு இதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்க உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை நிறுத்தி, அதன் பின் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்காக உடலை படிப்படியாக குளிர வைத்து ரத்த ஓட்டம் உடலில் எங்கும் பரவாதபடி சுமார் ஆறு நிமிடங்கள் வரை இறந்த நிலைக்கு கொண்டு சென்று சிகிச்சையை இதயப் பகுதியில் மேற்கொண்டு இருக்கிறார்கள். வழக்கம் போல ரத்த ஓட்டம் இருக்கக்கூடிய சமயத்தில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் சிக்கல் ஏற்படும் என்பதால் தான் இந்த முறையை கையாண்டார்கள்.
இதனை அடுத்து இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்ட சூழ்நிலையில் அந்தப் பெண்ணின் ரத்த ஓட்டத்தை படிப்படியாக உடலில் பாயும் படி செய்து பெண்ணின் உயிரை காப்பாற்றி விட்டார்கள்.
மேலும் பல மணி நேரங்களுக்கு பிறகு இயல்பு நிலையை அந்தப் பெண்மணி எட்டி இருக்கிறார். இதற்காக கடுமையான பணிகளை மருத்துவர்கள் கண்ணும் கருத்துமாக செய்திருக்கிறார்கள்.