“சலாலா.. ஓமன் நாட்டில் இருக்கும் அதிசய பாலைவனம்..!”- மூன்று மாதம் மட்டுமே நிகழும் மர்மம் தெரியுமா?
பொருளாதாரத் துறையில் மிகவும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்திருக்க கூடிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஓமன் நாடு பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. மத்திய கிழக்கு பகுதிகளில் இருக்கக்கூடிய நாடுகள் பெரும்பாலும் பாலைவனமாக தான் உள்ளது.
இந்தப் பாலைவனப் பகுதியில் உலகின் வேறு எந்த பகுதியிலும் நிகழாத அதிசயம் ஒன்று முதல் மூன்று மாதங்கள் மட்டுமே நிகழ்த்தி வருகிறது. இந்த நிகழ்வின் மர்மம் என்ன என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படி என்ன மூன்று மாதங்கள் மட்டும் நிகழும் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு மிக நன்றாக தெரிகிறது. இதற்கான விடை என்னவெனில் ஓமனில் இருக்கக்கூடிய பாலைவன பகுதியானது மலை காடாக மாறிவிடக் கூடிய அதிசயம் தான்.
இந்த சமயத்தில் அந்தப் பகுதியில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் என பல ஏற்பட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இதற்கு காரணம் சவாலா கரீஃப் (Salalah Khareef) அல்லது சவாலா என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிகழும் பருவ மழை காலத்தில் ஏற்படுவதாக நிபுணர்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த காலகட்டத்தில் அடர்ந்த மரங்கள் மட்டுமல்லாமல் கடுமையான பனியும் அங்கு நிலவும்.
இந்த சமயத்தில் இந்த பகுதியானது ஒட்டகங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வித ஜீவராசிகளுக்கும் இந்த பகுதி ஒரு சொர்கம் போல இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய அரேபிய சிறுத்தைகளுக்கு இந்த இடம் புகலிடமாக உள்ளது என்று கூறலாம்.
கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய இந்த பகுதியானது சுமார் 250 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது எனக் கூறலாம். இது கடற்கரையில் இருந்து ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.
ஓமன் நாட்டில் நிரந்தர ஏரியா, அருவியோ இல்லாத நிலையில் இந்த இடத்தில் மட்டும் அந்த மூன்று மாத பருவ மழை சமயத்தில் இவையெல்லாம் ஏற்படுவது வியப்பாகவே உள்ளது.
வாடி டார்பட் என்ற புகழ்பெற்ற ஏரி அங்கு காணப்படுகிறது. மேலும் ஓமனின் பழங்குடியின் மக்களான ஜப்பாலி மக்கள் பல நூற்றாண்டு காலமாக இந்த பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் அதிக அளவு சாம்பிராணி மரங்கள் காணப்படுகிறது.
மேற்கூறிய தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டாயம் இந்த கட்டுரையை பற்றி நீங்கள் உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.