“நிலவை பிடித்த இஸ்ரோவின் அடுத்த இலக்கு..!” – ஆதித்யா எல் 1..
நிலவின் தென் துருவத்தை எட்டிப் பிடித்திருக்கும் இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் அளப்பரிய சாதனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த வெற்றிக்கு பிறகு அவர்களது இலக்கு சூரியன்.
சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 மிஷனின் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த மிஷன் ஆனது விண்ணில் ஏவப்படும் தேதி எப்போது என்று தெரியவில்லை. எனினும் பிஎஸ்எல்வி உதவியோடு ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படும்.
இது குறித்த தகவல்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் மிஷன் ஆதித்யா எல் 1, சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்கலம் ஏவுவதற்கு தயாராகி வருவதாக கூறியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து ஆதித்யா எல் 1 சூரியனை வெகு தொலைவில் இருந்து கண்காணித்து, அதன் வளிமண்டலம், காந்தப்புலம் பற்றிய தகவல்களை பெற முயற்சி செய்வதோடு சூரியனின் கரோனாவை ஆய்வு செய்ய ஏழு பேலோடுகளுடன் உள்ள கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
இதன் மூலம் சூரிய ஒளி, சூரிய காற்று போன்றவற்றை இது படம் பிடிக்கும். ஏற்கனவே நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் 2018 ஆம் ஆண்டு ஏவப்பட்டு சூரியனுக்கு வெகு அருகில் சென்று விட்டது.
இதனை அடுத்து ஆதித்யா எல் 1 சூரியன் அருகே செல்லும்போது அதன் வெப்பத்தை எதிர்கொள்வது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் மிகவும் சிக்கல்கள் நிறைந்த இந்த திட்டத்தில் இஸ்ரோ சாதிக்குமா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.
நாசாவின் சூரிய விண்கலத்தோடு நமது ஆதித்யா எல் 1 ஒப்பிடும்போது சூரிய வெப்பத்தை தாங்க கூடிய வகையில் இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இந்த விண்கலத்தில் பல கருவிகள் உள்ளது இந்தியாவிலேயே முதல் முறையாக இது தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஆதித்யா எல் 1 ஐ வைத்து பூமியை இயக்கும் புயல்களை பற்றி அறியவும், கண்காணிக்கவும், இது உதவி செய்யும். இதற்குக் காரணம் சூரியனிலிருந்து வெளிப்பட்டு பூமியை நோக்கி செல்லும் ஒவ்வொரு புயலும் எல் 1 வழியாகத்தான் செல்கிறது.
எனவே ஒரு செயற்கைக்கோள் பூமி சூரிய அமைப்பில் எல் 1 சுற்றி ஒளிவட்ட பாதையில் வைக்கப்படுகிறது. இதனால் எந்த ஒரு கிரகணமும் இல்லாமல் சூரியனைத் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் முக்கிய நன்மைகள் ஏற்படும் என்று இஸ்ரோ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து இஸ்ரோவின் சூரிய இலக்கு நோக்கிய பயணம் வெற்றியடைய வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நிலவில் சாதித்தது போல் சூரியனிலும் இந்தியா சாதிக்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது கனவு விரைவில் மெய்ப்படும் என நம்புவோம்.