• November 23, 2024

“நெற்றியில் திருநீறு அணிவது கேலிக்குரிய செயல் அல்ல..!” – ஒளிந்திருக்கும் அறிவியல் மர்மம் பற்றி ஓர் அலசல்..

 “நெற்றியில் திருநீறு அணிவது கேலிக்குரிய செயல் அல்ல..!” – ஒளிந்திருக்கும் அறிவியல் மர்மம் பற்றி ஓர் அலசல்..

Thiruneeru

இந்துமத கலாச்சாரத்தில் நெற்றியில் திருநீறு தரிப்பது, குங்குமம் வைப்பது, சந்தனத்தை பூசுவது என்பது ஒரு முக்கிய கலாச்சார பழக்கமாக உள்ளது என்று கூறலாம். இப்படி செய்யக்கூடிய நபர்களை என்று உள்ளவர்கள் கேலியும், கிண்டலுமாக பார்த்து வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

இந்த திருநீறு பூசுகின்ற பழக்கம் எதனால் ஏற்படுத்தப்பட்டது? அப்படி திருநீறு, சந்தனம், குங்குமம் வைப்பதினால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இதை ஏன் கட்டாயமாக வைப்பதை நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.. என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இந்த கட்டுரை இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

Thiruneeru
Thiruneeru

“நீறு இல்லா நெற்றி பாழ்” என்ற பழமொழி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த வகையில் திருநீறு, சந்தனம், குங்குமம் தரிப்பதால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய மிகச்சிறந்த நன்மைகள் என்னென்ன? இந்த திருநீற்றை எப்படி செய்கிறார்கள்? என்பது பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

புல் வகைகளிலேயே அரசராக கருதப்படக்கூடிய அருகம்புல்லை உண்கின்ற பசு மாட்டின் சாணத்தை எடுத்து அதை உருண்டையாக்கி வெயிலில் காய விட வேண்டும். பிறகு இதனை உமியால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இந்த உருண்டைகளை வெந்து நீறாகும். இதுவே உண்மையான திருநீறு என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் திருநீற்றை உங்கள் நெற்றியில் வைக்கும் போது நல்ல அதிர்வுகளை மட்டும் இது உள்வாங்கிக் கொடுக்கக் கூடிய தன்மையோடு இருக்கும். நம்மை சுற்றி எண்ணற்ற அதிர்வுகள் ஏற்படும். அதில் இருக்கும் எதிர்மறையான அதிர்வுகள் மூலம் நாம் உடலில் பாதிப்புகள் ஏற்படும். அதை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த திருநீற்றுக்கு உள்ளது.

Thiruneeru
Thiruneeru

உடலின் மிக முக்கியமான பாகமாக கருதக்கூடிய நெற்றியில் அதிக வெப்பம் வெளிப்படும். மேலும் வெப்பத்தை உட்கிரகிக்க கூடிய ஆற்றல் இந்த பகுதிக்கு அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் திருநீறு தரிக்கும்போது சூரிய கதிர்களில் இருந்து வரக்கூடிய சக்தியை சரியான முறையில் உட்பிரகித்து உள் அனுப்பும் அற்புதமான பணியை  திருநீறு செய்வதால் தான் நமது முன்னோர்கள் நெற்றியில் கட்டாயம் திருநீறு இட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் நமது உடலில் இருக்கக்கூடிய சாம்பல் சத்து குறைந்து விட்டால் பக்க விளைவுகள் ஏற்படும். அதை தடுக்கக்கூடிய ஆற்றல் திருநீற்றுக்கு உண்டு. உங்கள் மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலியை தீர்க்க அந்தப் பகுதிகளில் நீங்கள் திருநீற்றை பூசினால் போதும் நீரினை உறிஞ்சி வலியினை நீக்கிவிடும்.

மேலும் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இருக்கக்கூடிய நுண்ணிய நரம்பு பகுதியில் சில அதிர்வு அலைகள் ஏற்படும். எனவே தான் இந்த இடத்தை பயன்படுத்தி உங்களை மனோ வசியம் செய்து விடுவார்கள். அதை தடுப்பதற்காகத்தான் திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இருக்கின்ற புருவங்களுக்கு மத்தியில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுரை தந்திருக்கிறார்கள்.

Thiruneeru & sandal
Thiruneeru & sandal

அது மட்டுமா? நெற்றி பகுதியில் உள்ள Frontal cortex பகுதியானது அதிக அளவு வெப்பமாவதால் மூளை சோர்வு ஏற்படுகிறது. இந்த மூளை சோர்வை தணிக்க அந்தப் பகுதியை குளிமையாக்க  சந்தனத்தை வைக்கிறார்கள். 

அப்படி சந்தனத்தை நீங்கள் வைக்கும் போது மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களை பதிவு செய்து வைத்திருக்கும் ஹிப்போகாமஸ் எனும் இடத்தில் இந்த ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு Frontal cortex பயன்படுத்துவதால் இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியூட்ட சந்தனத்தை நெற்றியில் வைக்கிறார்கள்.

சந்தனத்தை நீங்கள் உங்கள் நெற்றியின் புருவம் மத்தியில் வைக்கும் போது உங்களது சிந்தனை தெளிவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மன ஒற்றுமையும் மேல் ஓங்கும்.

குங்குமத்தை பொறுத்தவரை மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு கொண்டு தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமி நாசினிப் பொருட்கள் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே இந்த குங்குமத்தை உங்கள் நெற்றியில் வைப்பதின் மூலம் ஹிப்னாட்டிஸ் சக்தியை தடை செய்வதோடு மட்டுமல்லாமல், நமது கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளை தூண்டி விடக் கூடிய ஆற்றல் கொண்டது. நீங்கள் சிந்திக்கும் போது ஏற்படும் அபரிமிதமான சூட்டை குங்குமம் குறைக்கும்.

Thiruneeru & kukumam
Thiruneeru & kukumam

மேலும் தலைவலி, தலைபாரம், தலை சுற்றல் போன்றவை ஏற்படாமல் இருக்க அந்த நரம்பு மண்டலத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். மன உளைச்சலை தடுத்து மகத்தான ஆற்றலை உங்களுக்குள் ஏற்படுத்தக் கூடிய தன்மை திருநீறு, சந்தனம் மற்றும் குங்குமத்திற்கு உண்டு என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

எனவே நமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டு, அவர்கள் வகுத்த வழியில் செல்வதால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் அதை விடுத்து வீணாக பகுத்தறிவு பேசி பாழாய் போவதை விட்டுவிடுங்கள்.