• December 22, 2024

பிரத்தியாகாரம் செய்தால் சித்தர் ஆகி விடலாமா? – சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்..

 பிரத்தியாகாரம் செய்தால் சித்தர் ஆகி விடலாமா? – சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்..

Pratyaharam

இந்த உலகில் சித்தர்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இன்று வரை நிலவி வருகிறது அப்படிப்பட்ட சித்தர்களை நாம் ஏன் சித்தர்கள் என்று அழைக்கிறோம் தெரியுமா? மனிதர்களைத் தாண்டி இவர்கள் இடையே ஒரு விதமான சித்து செயல்களை செய்வதாலும் சித்தி பெற்றவர் என்ற நிலையில் தான் சித்தர் என்று கூறுகிறோம்.

இவர்கள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு வகையான யோகங்களை கற்று அறிந்ததின் மூலம் எட்டு சித்திகளை பெற்ற பெரும் சித்தர்கள் என கூறலாம்.

Pratyaharam
Pratyaharam


இந்த எட்டு வகையான சித்துக்களில் ஒன்றுதான் பிரத்தியாகாரம். இந்த எட்டு நிலையையும் அவர்கள் அடைந்து விட்டால் கட்டாயம் சித்தர்கள் என்று தான் கூற வேண்டும்.

இப்போது நீங்கள் எந்த பிரத்தியாகாரம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த பிரத்தியா காரம் என்பது உங்களுக்குள் இருக்கக்கூடிய 11 விதமான புலன்களை அடக்கி ஆள்வது தான்.

இதுவரை நாங்கள் ஐம்புலன்கள் பற்றி தான் கேள்விப்பட்டிருக்கிறோம் அது என்ன 11 வகையான புலன்கள் என்று நீங்கள் நினைப்பது நன்றாக தெரிகிறது. அதாவது ஐம்புலன்கள் பற்றி உங்களுக்கு தெரியும் அதோடு ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம் இவற்றை உள்ளடக்கியதே 11 வகையான புலன்கள் என்று கூறப்படுகிறது.

பிரதியாகாரம் என்பது பிரதி மற்றும் அகாரா என்ற இரண்டு சொல்களின் இணைப்புதான். வெளி நோக்கி செல்லக்கூடிய மனதை உள்நோக்கி அடக்கக்கூடிய சக்தியைப் பெற செய்கின்ற பயிற்சி முறை தான் பிரத்தியாகாரம் எனப்படும்.

இதில் அடயோகம், இலயயோகம், நியமம், ஆசனம், இலம்பிகா யோகம், மந்திர யோகம், ராஜயோகம், சிவயோகம் என பல வகைகள் காணப்படுகிறது. நமது மனமானது சுத்தமாகும் என்று கூறலாம்.

ஆமையானது எப்படி ஆபத்து வரக்கூடிய காலகட்டத்தில் தனது அங்கங்களை உள்ளே இழுத்துக் கொள்கிறதோ, அது போல மனிதனுக்கு ஏற்படும் மன சஞ்சலங்களை தடுக்கவும், அவற்றிலிருந்து வெளியே வரவும் ஐம்புலன்களையும் பிரித்து மனதில் ஆளக்கூடிய தன்மையை உருவாக்கும் இந்த அற்புத முறையை பயன்படுத்தி சித்தர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் தனது மனதை அலையவிடாமல் அப்படியே உள்ளுக்குள்ளேயே வைத்திருக்கக் கூடிய அற்புத கலையான இந்த பிரத்தியாகாரத்தை கற்றுக் கொள்வதன் மூலம் நமக்கு ஞானம் திட்டுவதோடு மட்டுமல்லாமல் மன ஒருமை அதிகரிக்கும் என கூறலாம்.

Pratyaharam
Pratyaharam

மன ஒருமை பயிற்சியின் மூலம் தான் சித்தர்கள் எண்ணற்ற ஆற்றலை அவர்களுக்குள் அடைந்தார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தினமும் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைத்து நீங்களும் சித்தரைப் போல் வாழ முடியும்.

மேலும் சித்தர்கள் இந்த பயிற்சியினை மேற்கொண்டதன் மூலம் சிவனை அடைந்திருக்கிறார்கள் என்று பல குறிப்புகளில் செய்திகள் கூறப்பட்டு உள்ளது. உங்களுக்கு இது போன்ற கருத்துக்கள் தெரிந்திருந்தால் எங்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.