என்னது லூனா 25 – ஐ தகர்த்து ஏலியன்களா? உண்மை நிலவரம் என்ன?
இந்த பூமியை தவிர வேறு கிரக கிரகங்களில் மனிதர்கள் வசிக்கிறார்களா? என்ற ஆய்வுகள் இன்று வரை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விண்வெளியில் இருக்கும் நிலவில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று பல நாடுகளும் போட்டி போட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது நிலவின் தென் பகுதி பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ரஷ்யா லூனா 25மற்றும் இந்தியா சந்திரயான் 3 விண்கலங்களை விண்ணில் செலுத்தியது.
இதனை அடுத்து சந்திரயான் 3 மற்றும் லூனா 25 இடையே கடுமையான போட்டிகள் நிலவியதாக கருத்துக்கள் வெளி வந்த நிலையில் லூனா 25 தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவில் மோதி வெடித்து சிதறியது.
இது வரை ரஷ்யா நிலவு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு லூனா 25 விண்ணில் ஏவியது. இதற்கு முன் ஏவப்பட்ட லூனா 24 சிறப்பான முறையில் செயல்பட்ட போதும் லூனா 25 நிலவின் தென்பகுதி ஆய்வில் களம் இறக்கப்பட்டது இதுவே முதல் முறை என கூறலாம்.
இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான் 3 நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய உள்ள நிலையில், இன்னும் அது நிலவில் தரை இறங்காமல் உள்ளது. விக்ரம் லேண்டெர் விண்ணில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள கூடிய சூழ்நிலையில் வெற்றி கிடைக்குமா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகள் நடக்குமா? என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.
இதனை அடுத்து நிலவின் தென் பகுதியில் ஏலியன்களின் ஆதிக்கம் இருந்த காரணத்தால் தான் அது லூனா 25 ஐ தகர்த்து இருக்கலாம் என்ற புரளியை சிலர் கிளப்பி விட்டிருக்கிறார்கள். மேலும் லூனா 25 எப்படி வெடித்தது என்ற விளக்கத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள நிலையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஏலியன்களோடு இந்த சம்பவத்தை இணைத்து பேசுவது தவறாகும்.
அது மட்டுமல்லாமல் சமீப நாட்களாக ஏலியன் பற்றிய விஷயங்கள் அதிக அளவு சமூக வலைத்தளங்களில் பரவி உள்ள காரணத்தாலும், இந்த விஷயத்தை ட்ரெண்டிங் ஆக்க அவர்கள் இதுபோன்ற புரளிகளை கிளப்பி விட்டு இருக்கலாம் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
மேலும் இது போன்ற புரளிகளை நீங்கள் இனி நம்ப வேண்டாம். உண்மை என்ன என்பதை தெள்ளத் தெளிவாக ரஷ்யா விண்வெளி மையம் அறிவித்து விட்ட நிலையில் ஏலியன்களோடு இணைத்து சொல்லப்படக்கூடிய தகவல் உண்மைக்கு புறம்பானது என உறுதியாக கூறலாம்.