“போபாலில் இருக்கும் பேய் கோட்டை..!” – திக்.. திக்.. கருப்பு தாஜ்மஹால்..
நீங்கள் ஆக்ராவில் மட்டும் தான் தாஜ்மஹால் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது முற்றிலும் தவறான கூற்றாகும். இந்தியாவை பொறுத்தவரை பல தாஜ்மகால்கள் உள்ளது, என்றால் அது உங்களுக்கும் மேலும் வியப்பை ஏற்படுத்தும்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஒரு கருப்பு நிறத்தில் ஷாஜகான் தாஜ்மஹாலை எழுப்ப முயற்சி செய்திருக்கிறார் என்ற செய்தி பற்றிய கருத்துக்கள் வரலாறு காணப்படுகிறது. மேலும் பல கட்டிடங்களை தாஜ்மஹால் போல கட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த கட்டிடங்கள் தாஜ்மஹாலை போல பிரம்மாண்டமான முறையில் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
அதன் அடிப்படையில் கோபாலில் உள்ள கருப்பு தாஜ்மஹால் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த கருப்பு தாஜ்மஹாலில் தான் பேய் உலா வருவதாக பலரும் கூறி வருகிறார்கள். மேலும் முதலில் போபால் பேகம்களின் இல்லமாக இந்த தாஜ்மஹால் இருந்துள்ளது. இதனை ஒரு மிகப்பெரிய கோட்டை என்றும் கூறலாம்.
பார்ப்பதற்கு பிரம்மாண்டமான இந்த கோட்டையில் மிகப்பெரிய கலை நயத்தோடு உரிய கட்டிடங்கள் உள்ளது. மேலும் இந்த கோட்டை ஆங்கிலேயர்களின் கண்களை உறுத்தியது என்று கூறலாம். ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்ட இந்த கோட்டைக்கு அவர்கள் தாஜ்மஹால் கோட்டை என்ற பெயரை வைத்து அழைத்தார்கள்.
இந்தக் கோட்டை பகுதிகளும், கோட்டையிலும் பல பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. கோட்டை பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருப்பது போல, படு பயங்கரமாகவும் காணப்படும்.ஸ்த்ரீ என்ற படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த கோட்டைகள் நெகட்டிவ் எனர்ஜி இருந்ததை உணர்ந்ததாக கூறியிருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இங்கு இருக்கக்கூடிய உள்ளூர் வாசிகள் இந்த கோட்டைக்குள் பேய்கள் வசிப்பதாக நம்புவதோடு அதன் நடமாட்டம் இருப்பதை உறுதியாக கூறி வருகிறார்கள். இன்று பார்ப்பதற்கு சிதலம் அடைந்து காணப்படக்கூடிய இந்த கோட்டை ஒரு காலத்தில் மிகவும் பிரமாண்டமான கோட்டையாக இருந்துள்ளது.
தற்போது இந்த கோட்டைக்கு எந்த ஒரு பார்வையாளர்களும் வந்து செல்வதில்லை. உள்ளுர்காரர்களின் பேய் கதைகளையும் நம்பி பலரும் வருவதில்லை என்று கூறுகிறார்கள்.
எனினும் இந்த கதைகளை நம்பாதவர்கள் அடிக்கடி அந்த பகுதிக்கு சென்று வருகிறார்கள்.மத்திய அரசால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டையை சீரமைக்க கூடிய பணிகள் நடந்து வருகிறது.
மேலும் இந்த கோட்டையை பாரம்பரிய உணவகமாக மாற்றலாமா என்ற எண்ணத்தில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதோடு இந்த திகில் நிறைந்த கோட்டைக்கு உணவு அருந்த யார் யார் வருவார்கள் என்று உள்ளூர் வாசிகள் பேசிக் கொள்கிறார்கள்.
ஒரு காலத்தில் பிரிட்டிஷ்காரர்களின் கண்களில் பட்டு பயன்பாட்டில் இருந்த இந்த கோட்டை தற்போது பேய்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த கோட்டையை யாரும் விரும்பவில்லை என்று தான் கூற வேண்டும்.
டிக்.. டிக்.. கருப்பு தாஜ்மஹாலை பார்க்க நீங்கள் விருப்பப்படுகிறீர்களா? உங்களுக்கு பேய்களின் மீது நம்பிக்கை உள்ளதா? என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.