“பெண்கள் அவசியம் போட வேண்டிய ஆபரணங்கள்..!” – இதனால் இவ்வளவு பலன்களா?..
தங்கம் என்றாலே அதிக அளவு விரும்பக் கூடிய பெண்கள் அதில் செய்த ஆபரணங்களை அணிவதைப் பற்றி கேட்கவா? வேண்டும். அந்த வகையில் பெண்கள் அவசியமாக போட வேண்டிய தங்க ஆபரணங்கள் பற்றியும், அதை அணிவதால் ஏற்படக்கூடிய நற்பலன்களை பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாகவும், விளக்கமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
ஐம் புலன்களில் ஒன்றான காதுகளில் பெண்கள் தோடு என்ற ஆபரணத்தை அணிவார்கள். மேலும் இவர்கள் அலை போல ஆடுகின்ற ஜிமிக்கி, வைரத்தோடு, சுத்துமாட்டி, சைடு காது தோடு என பல வகையான தோடுகளை அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இந்த தோட்டினை பெண் குழந்தை பிறந்த 22 ஆவது நாள் அல்லது ஒரு வயதுக்குள் காது குத்தல் நிகழ்வை சீரும் சிறப்புமாக நடத்தி காதில் தோட்டினை போடுவது ஒரு மிகப்பெரிய சடங்காகவே உள்ளது.
அந்த வகையில் பெண்கள் காதுகளில் தோட்டை அணிவதின் மூலம் கண் மற்றும் காது நரம்புகள் இணைய கூடிய இடத்தில் வியந்த தங்க ஆபரணம் இருப்பதால் கண் பார்வையை நன்றாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், மூளையை நன்றாக செயல்பட வைத்து ஞாபக சக்தியையும் தூண்டக்கூடிய ஆற்றல் படைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் பூபெய்திய பெண்கள் மூக்குத்தி அணிவதை இன்றும் பலர் மரபாக கொண்டிருக்கிறார்கள். மூக்குத்தி பார்ப்பவர்களை தூண்டி இழுப்பதோடு, இந்த மூக்குத்தியை அணிவதின் மூலம் மூக்கில் உள்ள அந்த முக்கியமான புள்ளியானது சிறு குடல் மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்கக்கூடிய தன்மை கொண்டது.
அது மட்டுமல்லாமல் புதிதாக பூப்பெய்திய பெண்கள் மண்டை ஓட்டில் சில வாயுகள் உண்டாகிறது. இந்த வாயுக்கள் உருவாகாமல் முழுவதும் வெளியேற மூக்கில் போடப்படும் துளை உதவி செய்வதாக கூறுகிறார்கள். அதே போல கர்ப்பப்பையின் இயக்கத்திற்கு மற்றும் சுவாசத்திற்கும் இந்த சிறிய துளை பயன்படுத்துகிறது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
பெண்கள் கைகளில் வளையல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி வளையல் அணியக்கூடிய பெண்களின் உடலில் வெள்ளை அணு உற்பத்தி அதிகரித்து, ஹார்மோன்கள் சரியான விகிதத்தில் சுரக்க உறுதுணையாக இருக்கும்.
மேலும் வட்ட வடிவ வளையங்களை அணிவதின் மூலம் மின்காந்த ஆற்றல் அதிகரித்து நமது கைக்குச் சென்று உள்ளங்கையை மிகச் சிறப்பாக செயல்பட வைப்பது, அனைத்து வேலைகளையும் செய்ய தேவையான ஆற்றலை கொடுக்க கூடிய அற்புத சக்தி இந்த வளையங்களுக்கு உள்ளது.
எல்லா பெண்களுமே கால்களில் கொலுசு அணிவதால் குதிங்காலில் இருக்கும் நரம்பின் வழியாக கல்லீரல், சிறுநீர்ப்பை, மண்ணீரல், பித்தப்பை மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் ஏற்படும் உபாதைகளை குறைத்து அவற்றை சீராக்கும் தன்மை கொலுசுக்கு உள்ளது. எனவே எல்லா பெண்களும் கட்டாயம் கொலுசு அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அத்தோடு திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை தொடர்ந்து மேற்கொள்வதால் காலில் உள்ள நரம்பு, கர்ப்பப்பை பகுதியில் இணைய கூடியது. கர்ப்பப்பையை தூண்டி விடக் கூடிய ஆற்றல் மெட்டிக்கு உள்ளது. மேலும் மெட்டி அணிவதின் மூலம் கர்ப்பப்பையில் இருக்கும் நீரின் அளவினை சரியாக பராமரிக்க இந்த மெட்டி உதவி செய்கிறது.
எனவே பெண்கள் தங்கள் வாழ்நாளில் கட்டாயம் மேற்கூறிய அணிகலன்களை அணிவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம் என்பது இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும். இது ஒரு பாரம்பரிய பழக்க, வழக்கம் தேவையில்லை என்று நீங்கள் கருதாமல் அதில் இருக்கும் அறிவியல் உண்மைகளை உணர்ந்து நம் முன்னோர்கள் கூறிய வழியில் சென்றால் எதிலும் நமக்கு நன்மை கிட்டும்.