“உலகில் மிகச் சிறிய பறவை ஹம்மிங் பேர்டு (Hummingbird)..!” – உங்களை ஈர்க்கும் ஆச்சரியமான தகவல்கள்..
இந்த உலகிலேயே மிகவும் பெரிய உயிரினம் எது என்று கேட்டால் நீங்கள் நீல திமிங்கலம் என்று பட்றென்று சொல்லிவிடுவீர்கள். அந்த வகையில் உலகிலேயே மிகச்சிறிய பறவை எது என்று கேட்டால் நீங்கள் நிச்சயமாக யோசிப்பீர்கள்.
இனிமேல் நீங்கள் யோசிக்காமல் மிகச்சிறிய பறவை ஹம்மிங் போர்டு என்று உரக்கக் கூறுங்கள். உலகில் மிகச் சிறிய பறவையான ஹம்மிங் பேர்ட் கரிபியனில் இருக்கும் கூபா தீவினை பூர்வீகமாக கொண்டது. இந்தப் பறவையின் எடையானது நமது ஐந்து ரூபாய் நாணயத்தின் எடையை விட குறைவானது என கூறலாம்.
வெறும் ரெண்டு இன்ச் உயரம் கொண்ட இந்த பறவைகளின் முட்டைகள் பார்ப்பதற்கு காபி கொட்டைகளை விட மிகவும் சிறிய அளவில் இருக்கும். இதன் இறகுகள் சாம்பல் நிறத்திலும், இளம் மஞ்சள் நிறத்திலும் காணப்படுவதால் பார்க்கும் போதே அழகிய தோற்றத்தால் நம்மை வசீகரிக்கும்.
மேலும் இந்த ஹம்மிங் பறவைகள் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் அதிக அளவு காணப்படுகிறது. இந்தப் பறவையில் பல இனங்கள் காணப்படுகிறது. அதில் ஒன்றுதான் கேலியோப் ஹம்மிங் பறவை. இது இரண்டு கிராம் எடையோடும் மூன்று இன்சு நீளத்தோடும் காணப்படும். பொதுவாக இந்த பறவை இனம் ஆனது கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிக அளவு உள்ளது.
இந்தப் பறவை இனத்தின் மற்றொரு ரகம் பொதுவான ஃபயர் கிரிஸ்ட் வகையான பறவைகள்.இது 9.3 சென்டிமீட்டர் நீளமும், 5.5 கிராம் எடையோடும் இருக்கும். இவை பெரும்பாலும் ஐரோப்பாவில் காணப்படுகிறது. இந்த பறவைகள் வடமேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பறவை இனத்திலேயே தற்போது அழியக்கூடிய விளிம்பில் இருக்கக்கூடிய எஸ்மொரால்டாஸ் வுட்ஸ்டார் என்ற பறவையானது, தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. மிகச்சிறிய பறவையான இது 2.5 இன்ச் நீளம் மட்டுமே உள்ளது.
மனிதர்களோடு எளிதில் பழகக்கூடிய விபில் இனத்தைச் சேர்ந்த ஹம்மிங் பறவைகள் ஆஸ்திரேலியாவில் அதிக அளவு காணப்படுகிறது. இவை பொதுவாக 3.3 இன்சு நீளம் கொண்டு இருக்கும். இதன் அலறல் சத்தம் மிகவும் பிரபலமானது.
மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் ஹம்மிங் பேர்ட் பற்றி வேறு ஏதேனும் புதிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் அவற்றை எங்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.