“விரைவில் ஹைட்ரஜன் பவர் ஹெரிடேஜ்..!”- நீலகிரி ஸ்பெஷல்..
இனி விரைவில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கக்கூடிய ரயில் சேவையை நீலகிரி மலை ரயில் திட்டத்தில் கொண்டுவர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 8 பாரம்பரிய மலைப்பாதை வழி தடங்களில் மொத்தமாக 35 ரயில்கள் ஹைட்ரஜனின் இயங்கும் படி களம் இறக்கப்பட உள்ளது. இதில் நீலகிரியில் மட்டும் எட்டு இடங்களில் இந்த ரயில் பயன்பாடு வருவது வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.
இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரியில் நண்பர்களுடன் டூர் செல்வதற்கும், புதுமண தம்பதிகள் தேன்நிலவை கழிப்பதற்கும் அதிகளவு செல்லக்கூடிய இடமான ஊட்டிக்கு இனி இந்த ஹைட்ரஜன் ரயிலில் நீங்கள் பயணம் செய்யலாம்.
இது வரை மிகவும் மெதுவாக சென்று கொண்டு இருந்த ஒரே டிராக் ரயிலில் இருந்து விடுதலை பெற்று நீங்கள் 46 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்த நிலை மாறப்போகிறது.
சுற்றுப்புற சூழ்நிலைக்கு தீமை பயக்காத இந்த ஹைட்ரஜன் ரயில்கள் ஒரு ஈகோ பிரண்ட்லி ரயில்கள் என்று கூறலாம். சுமார் 80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கக்கூடிய இந்த ரயில்கள் நீலகிரி மட்டுமல்லாமல் டார்ஜிலிங், இமயமலை, சிம்லா, மில் மோவர், மா காய் போன்ற பாதைகளிலும் இயக்கப்பட உள்ளது.
இதனை அடுத்து தரம் வாய்ந்த இந்த ரயில் சேவையை இந்தியன் ரயில்வேஸ் வழங்க உள்ள நிலையில் இதற்காக 111.83 கோடி பண ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில்கள் விரைவில் பயன்பாட்டுக்கு 2023 – 24 ஆம் ஆண்டுக்குள் வந்துவிடும் என தெரிகிறது.
அப்படி இந்த ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு வந்து விட்டால் டாய் ட்ரெயினின் சேவை நிறுத்தப்படக் கூடிய சூழல் உருவாகும் என்பது பலரிடையே சோகத்தை உருவாக்கி உள்ளது.
இதனை அடுத்து டீசல் மூலம் இயங்கும் ரயில் என்ஜின்களை மின்சார எஞ்சின் ஆக மாற்றக்கூடிய பணிகளும் சோதனை ஓட்டமும் தற்போது இந்தியன் ரயில்வே துறையால் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட ரயில்களில் மலை பயணங்களை நாம் மகிழ்ச்சியோடு மேற்கொள்ளலாம்.