• May 28, 2023

அழகுத் தமிழாம்!

 அழகுத் தமிழாம்!

https://www.instagram.com/thamizh.aru/


அன்பும் தமிழாம்!
அழகும் தமிழாம்!!

ஆதியும் தமிழாம்!
ஆக்கமும் தமிழாம்!!

இன்பமும் தமிழாம்!
இயற்கையும் தமிழாம்!!

ஈரமும் தமிழாம்!
ஈர்ப்பும் தமிழாம்!!

உண்மையும் தமிழாம்!
உயர்வும் தமிழாம்!!

ஊனும் தமிழாம்!
ஊக்கமும் தமிழாம்!!

எண்ணமும் தமிழாம்!
எழுச்சியும் தமிழாம்!!

ஏகனும் தமிழாம்!
ஏற்றமும் தமிழாம்!!

ஐயமும் தமிழாம்!
ஐம்புலனும் தமிழாம்!!

ஒழுக்கமும் தமிழாம்!
ஒற்றுமையும் தமிழாம்!!

ஓங்கும் தமிழாம்!
ஓர்மையும் தமிழாம்!!

ஒளதசியமும் தமிழாம்!
அதுவே, ஒளவை போற்றிய அழகுத் தமிழாம்!!

S. Aravindhan Subramaniyan

சனோஃபர்

எழுத்தாளர்

  • ஏகன் – இறைவன்
  • ஓர்மை – துணிவு
  • ஒளதசியம் – அமிர்தம்

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator