• March 26, 2024

Tags :Tamil Kavithaikal

நதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு

நதியோடு நேர்ததெம்தமிழ் பிறப்புஅந்நதி தானேஉயிர்களின் அனுசரிப்பு வளைந்து நெலிந்தோடியவழியெங்கும்வாழ்வின் மையம்கூடி விடிந்தோம் விதைகளாகியேவிழுந்து கிடந்தோம்விவசாயமாகியேஉயிர்ப் பிடித்தோம் ஆர்ப்பரித்தோடியகரையெங்கும்ஒதுங்கி கூலாங்கற்கள்குழந்தைகளானோம் சிலிர்த்து குலாவிமேனி தழுவிஆற்றின் மடியில்விளையாடிய அற்புதங்கள் நாகரீக நரி துரத்தநகரத் தொடங்கியேநகர நகர பயணித்தநாடோடி அற்ப பதங்கள் அந்தமும் ஆதியும்நீரே ஆதாரமாகியும்நதி வழிய நதி வழியேநகரப் பிரவேசம் நுட்பங்களின் நூலிலையில்நீர் விதி அத்துப் போகஊர் ஊராய் வீதி வீதியாய்தலைவிதியென்றுஅலைகின்றோம் தண்ணீர் தேடும்கண்ணீர் குடங்களாய்..!Read More

தமிழ்நாடந்தாதி

அழகிய அந்தாதி தமிழ் நாடுமுதன் முதலாய் மனிதஉயிரை உடலில் ஊட்டியபிரம்மம் எங்கள் தமிழ்நாடு தாய் மொழியின் பெயரிலேதாய் தமிழ் நாடு எங்கள்தாயாகவே தாங்குவதால்அது எங்கள் தாய்நாடு உலகின் மூத்த குடியாய்புவி பிளந்து பிற உயிர் வாழவழி தந்து உயர்ந்து நிற்கும்வழித்தோன்றல் எங்கள் தமிழ்நாடு கட்டிடக்கலை,சிற்பக்கலை,ஓவியக்கலைகளெல்லாம்குகைகளுக்குள்ளும் சீர்மிகுகுடைந்தது எங்கள் தமிழ்நாடு இயல்,இசை,நாடகமெனமுத்தமிழாய் மொழியிலும்முக்கனிச் சுவையை கூட்டிசுவைப்பது எங்கள் தமிழ்நாடு வீர தீரங்களில் விளையாடியேவித்தைகளை உடைத்துஉலகிற்கே கற்றுக் கொடுத்தவித்தகம் எங்கள் தமிழ்நாடு நாடறிந்த அறிஞர்கள் மேதைகள்என விண்ணகம்,மண்ணகம்ஆய்ந்தறிந்த ஓலைச்சுவடிபுத்தகம் எங்கள் […]Read More

உயிர்களின் அரசாட்சி – அதிகாரம் இல்லாத “அரச ஆட்சி”

அழகாய் ஓர் அரசமரம்பிரதான சாலையோரம்சற்றே பத்தடி தூரம்அங்கே ஓர் பேருந்துநிறுத்தம் பேருந்திற்காய்காத்திருக்கும்வரைபயணிகளுக்கெல்லாம்மரமே நிழற்குடை வீசும்காற்றைதலையால்தடுத்துஇலையால் துடைத்துவடிகட்டித் தரும்விதம்நின்றதுஅந்த அற்புத மரம் மரத்தினடியில் ஓர்நீண்ட சாய்வு நாற்காலிவழிப் போக்கன் யாரும்போவான் இளைப்பாறி மரக்கிளையின் உச்சியிலேகண்டதோர் காட்சியிலேமனமந்த மரமாய் மாறஏங்கியது அந்தநொடியிலே அடர்ந்திருந்த ஓர் கிளைமேல்படர்ந்திருந்த பறவையின் கூடுபார்க்க பார்க்க கண்களுக்குள்பதிந்தது பரவசத்தோடு தாய் பறவை ஏதோபாடம் சொல்லசேய் குஞ்சுகளும்கீச்சி கீச்சி பதில் சொல்ல விரைந்து வீசிய காற்றங்கேவித விதமாய் தாலாட்டியதேகிளைகளோடு இலைகளும்இதமாய் தலையாட்டியதே தனிமரம் என்றாலும்பொதுநலம் பொதிந்ததேசுயநலமில்லாமல்சுகமெலாம் தந்ததே […]Read More

கரம் தந்து முகவரி தந்த முதியோர் இல்லம்!

வாங்கிய ஒரு வரமாய் பெற்றெடுத்த பிள்ளைகள்தாங்கிய படகு மரமாய் சென்று வந்த எல்லைகள் வாரிசுகள் என்றல்லவா வாரியணைத்து வளர்த்தார்கள்வாய் மொழிந்ததற்கே வாரியிறைத்து திளைத்தார்கள் வாலிபங்கள் வந்தேற வலிமை காலங்கள்வலைத்து கட்டிய கோலாகலத் திருமண விழா தருணங்கள் மருமகளாய் கால்வைத்தாள்மஹாலெட்சுமி மருமகள்தலையணை மந்திரங்களால் தலைவனை மந்திரிக்கஇல்லறமங்கே அறம்மாறிநல்லறமன்றே நரகமாய்.. கடும் வார்த்தைகளால் வீசிடும் புயலைப் போல் புதல்வர்கள்தாங்கிய தூண்களாய் சாய்ந்த தந்தை தாய் கள்ளமில்லா உள்ளமெல்லாம் முகம்மாறிய நடிப்புத் திரைகளில்வேறு வழியின்றி சரண் புகுந்த அநாதை இல்லங்கள் நினைவுகளோ […]Read More

கண்களும் கண்ணீரும்!

காதலிப்பவர்களுக்குகண்களே கவிதை கவிஞர்களுக்கோ கண்களேகரு விதை கண் மருத்துவர்களுக்கோ கண்களே வாழ்க்கை கண் பார்வையற்றவர்களுக்கோகண்களே கனவு மேடை மனிதர்களுக்கு கண்களேஉன்னத கருவி இந்த எல்லா கண்களுக்கும் கண்ணீர்மட்டுமே ஆறுதல் அருவி ஏன் கடவுளுக்கும் கண்ணிருந்தால்அவனுக்கும் அது தான்ஆறுதல் என்று தெரிவிRead More

பிறப்பொன்றே எம்தமிழ்

தனிப் பெருமையோடெம் தமிழ்தரணியாளும் தங்கத்தமிழ்உயர்வினும் உயர்த் தமிழ்உடலல்ல எம்முயிர்த் தமிழ் ஊமையும் உரக்கப் பேசசிறக்கச் செய்ததெம் தமிழ்மொழியையும் விழிகளாய்உற்றுப் பார்க்கச் செய்ததெம் தமிழ் பூமித்தாயையே சேயாய்பெற்றெடுத்ததெம் தமிழ்பூமிக்கே ஓர் உணர்வடிவம்முதலாய் தந்ததெம் தமிழ் கற்காலம் கடந்து வந்தேபொற்காலம் செய்ததெம் தமிழ்கர்ப்பினை பொற்கொடை என்றேபோற்றி பறைசாற்றியதெம் தமிழ் நரம்பினில் இரும்புக் குழம்பெனகொதித் தோடியதெம் தமிழ்புறம் கூறி புலம்பு வார்க்கெல்லாம்செம்மையை உரைத்ததெம் தமிழ் தெய்வமே திருவருளியதெம் தமிழ்அசரீரியாய் ஒலியெழுந்ததெம் தமிழ்அன்பின் ஆழமதில் அடையாளமாய்அர்த்தம் தந்ததெம் தமிழ் பிறக்கும் குழந்தையாய்பிறந்தோங்குவதும் எம்தமிழ்யாதழிந்த […]Read More

இரு செவிகள் கேட்கும்படி பறை கொட்டுவோம்!

சாதியில்லா சமுதாயத்தை உருவாக்குவதுஇளைஞர்கள் கையிலே! மனிதன்,வீரத்திற்கு சிலை வைத்தான்,விடுதலைக்கு சிலை வைத்தான்,அழகுக்கு சிலை வைத்தான்,அறிவுக்கு சிலை வைத்தான், ஆனால்,அன்புக்கு சிலை வைக்கவில்லை,அன்பு ஓர் அற்புத உணர்வு!அது அனைத்து உயிர்களிடமும் உள்ளது… நிலத்தின் அடிப்படையாகநாடு பிரிக்கப்பட்டது,மொழியின் அடிப்படையாக,மாநிலம் பிரிக்கப்பட்டது, ஆனால்,மனிதனை அடிப்படையாக கொண்டு,எந்த மதமும், எந்த சாதியும் ,பிரிக்கப்படவில்லை என்பது, வெறும் கண்களால் காற்றைப்பார்ப்பதர்க்கு சமம்… அன்று எவனோ!திணித்த மூடநம்பிக்கை,சாதி, மதம், இனம்இவையெல்லாம் கலந்து,நம்மை களங்கப்படுத்துகிறதே! புள்ளிகள் இருந்தும்,கோலமிடமுடியாத, நட்சத்திரகூட்டங்களை போல,பல சாதிகள் கூட்டம், கூட்டமாக இருந்தும்..ஒன்று சேர்க்கமுடியாமல்,தவிக்குதே! […]Read More

விருப்பத்திற்கும் விலகலுக்குமான ஊசலாட்டங்கள்!

நினைவுகள் வற்றாத உன் கண்களில்நிறைந்திருப்பது எனக்கான நேசமா? நெருக்கம் உணர்ந்த பொழுதுகள்!நெருஞ்சி முள்ளான காலங்கள்!! விருப்பத்திற்கும் விலகலுக்குமானஉணர்வின் ஊசலாட்டங்கள்!!! வெப்பத்தணலாய்… நான்!வேட்கைக்கான அக்னிப்பிழம்பாய்…நீ! அகலாத நினைவுகளின்கொழுந்திட்ட தீயாக…நான்!! என் சுவாசித்தலின்சுடராய்…நீ!!விலகாத…விலக்காத நின்நுதல்; சுட்டெரிக்கும் சூரியன்!கானலான நம் நேசங்கள்;குளிர் நிலவு!! நித்தம் நெருடிடும் என் மனதின்நிஜம் நீ என்பதை அறிவிப்பாயா?Read More

அன்பே! நீ மாறிவிடு

அன்பே! நீ காற்றாய் மாறிடு!எனைத் தொட்டுத் தழுவி கிறக்கிடு!தலை கோதி வருடி மயக்கிடு!சுவாசக் காற்றில் கலந்து எந்தன்மூச்சாய் மாறி வாழ்ந்திடு! அன்பே! நீ நீராய் மாறிடு!மழைத் துளியாய் முத்தமிடு!இடி மின்னி முழங்கிப் பொழிந்திடு!அதிரடி அன்பில் நனையவிட்டுமேனி நடுங்கச் செய்திடு! அன்பே! நீ நெருப்பாய் மாறிடு!காதல் நெய்யில் நனைத்திடு!மோக நெருப்பில் கொளுத்திடு!செந்நீரும் வற்றிப் போகுமளவுக்குதாகத்தில் என்னைத் தவிக்கவிடு! அன்பே! நீ நிலமாய் மாறிடு!எங்கிருந்தாலும் ஏந்திடு!சலிப்பின்றி வளங்களை ஈந்திடு!தாயைப் போல என்னைத் தாங்கிஎனக்கே எனக்காய் வாழ்ந்திடு! அன்பே! நீ வானாய் […]Read More

வா காதல் பெருமழையில் நனையலாம்!

மோனத்தின் வலிமைமெல்லிசையின் இனிமைஆன்மாவின் அடியாழத்தில்பேரொலியை எழுப்புகிறது! உயிரளவான என் நேசிப்பை;வாழ்தலுக்கான இருத்தலை;தொலைதூரம் சென்று தேடவில்லை… !களிப்பூட்டும் உன்குரலின்;மாயாஜாலத்தில் வாழ்கிறேன்!! பருகிப் தீர்ந்துவிடநினைக்கும் வாழ்க்கையில்,தீராத காதலைநினைவில் நிறுத்திவிடும்மாயவித்தைக்காரனே!!! இன்று நான்அருகில் வர நினைத்தாலும்சூழலின் கைதியாய்எட்டவே நிற்கிறாய்….!அதனாலென்ன…? மனங்களின் இடைவெளியைத்தகர்த்து நெருக்கிஇணைத்துவிட்ட இதயங்களுக்குதூரமும் தூறல்போலத்தான்வா காதல் பெருமழையில் நனையலாம்!!Read More