திருமணமான திறமையுள்ள பெண்கள்
வாழ்வியல் முறை என்று எடுத்துக் கொள்ளும்போது ஆண் – பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு.
ஆனால் உரிமை என்று வரும் போது, இங்கு ஒருவர் கொடுக்கவும், மற்றொருவர் பெறுவதும் இல்லை.
அப்படியிருக்கும் பட்சத்தில் ‘திருமணமான திறமையுள்ள பெண்கள்’ என்று எடுத்துக் கொண்டால் அன்றும், இன்றும் என்று பிரித்துப் பார்க்க, சில சூழ்நிலைகள் காரணமாகவே அமைந்துள்ளது.
அன்றைய கால திறமையுள்ள பெண்கள் பலர் இருந்தாலும் சிலரின் திறமைகள் மட்டுமே அனைவருக்கும் தெரியும் படியாக வெளிச்சத்தில் இருந்தது. பெரும்பாலான பெண்களின் திறமைகள் தன் வீட்டு சமையலறையிலேயே முடிந்துவிட்டதை காணமுடிகிறது. அதில் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டுமே தன் திறமைகளை அடையாளப்படுத்திக் கொண்டார்.
ஆனால், இன்று முற்றிலும் மாறுபட்ட நிலையே பார்க்க முடிகிறது. சமையலறை தொடங்கி, விஞ்ஞான உலகம் வரை பெண்கள் பல இடங்களில் மிளிர்வதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆணுக்கு பெண் சமம் என்ற கூற்று போய், இன்று ஆண்களை விட பெண்களே பல இடங்களில் சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு முதற்மை காரணம் அவர்களை ஆதரிக்கும் ஆண்களே!
பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்ற கூற்று உடைத்து, பல இடங்களில் பெண்கள் முத்திரை பதிப்பது இன்று பார்க்க முடிகிறது. அன்று போல் இல்லாமல் இன்று பத்தில் ஒன்பது பெண்கள் தங்களுடைய திறமைகளை சமுதாயத்திலும், தன் வாழ்விலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
திறமையை தூக்கி நிறுத்த அவளின் கணவனும் அவளோடு கைகோர்த்து கொள்கிறான். சமையல், பாடல், நடனம், அறிவியல், விஞ்ஞானம் என அனைத்திலும் பெண்கள் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளனர்.
பேருந்து, ஆட்டோ, விமானம் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்து உள்ளனர். பெண்களே இல்லாத துறைகளைப் பார்ப்பது இப்பொழுது கடினமாக உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணின் திறமையை அங்கீகரிக்கும் அத்துணை ஆண்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
1 Comment
Very nice ? Pavithra
Comments are closed.