• May 28, 2023

தமிழில் மனைவிக்கு 59 பெயர்கள்

 தமிழில் மனைவிக்கு 59 பெயர்கள்

ஏய்..

இங்கு இப்படிதான் சிலபேர் தன் மனைவியை மரியாதை இல்லாமல் பொதுவாக அழைக்கிறார்கள். ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை அர்த்தநாரீஸ்வரராக இருந்து இறைவனே உணர்த்தியுள்ளார். நம்மில் பாதியாக உள்ள மனைவிக்கு ஆங்கிலத்தில் Wife, Spouse என ஒரு சில மாற்று பெயர்களே உள்ளன. ஆனால் நம் தாய்தமிழில் மனைவிக்கு
59 பெயர்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

  1. இல்லத்தரசி
  2. மனையுறுமகள்
  3. தாட்டி
  4. தாரம்
  5. துணைவி
  6. வல்லபி
  7. வனிதை
  8. வீட்டா
  9. கடகி
  10. கற்பாள்
  11. காந்தை
  12. வீட்டுக்காரி
  13. கிருகம்
  14. கிழத்தி
  15. குடும்பினி
  16. பெருமாட்டி
  17. பாரியாள்
  18. பொருளாள்
  19. கண்ணாட்டி
  20. வதுகை
  21. வாழ்க்கை
  22. வேட்டாள்
  23. விருந்தனை
  24. உல்லி
  25. சானி
  26. சீமாட்டி
  27. சூரியை
  28. சையோகை
  29. தம்பிராட்டி
  30. தம்மேய்
  31. தலைமகள்
  32. மணவாளி
  33. மனைவி
  34. நாச்சி
  35. பெண்டு
  36. இல்லாள்
  37. கோமகள்
  38. மணவாட்டி
  39. பத்தினி
  40. பரவை
  41. தலைவி
  42. அன்பி
  43. இயமானி
  44. ஆட்டி
  45. அகமுடையாள்
  46. ஆம்படையாள்
  47. நாயகி
  48. பெண்டாட்டி
  49. ஊழ்த்துணை
  50. மனைத்தக்காள்
  51. வதூ
  52. விருத்தனை
  53. ஊடை
  54. இல்
  55. பாரியை
  56. ஆயந்தி
  57. மகடூஉ
  58. மனைக்கிழத்தி
  59. குலி

இனி உங்கள் மனைவியை, வாய்க்கு வந்தவாறு கூப்பிடாமல், இதில் ஏதாவது ஒரு பெயரை தேர்ந்தெடுத்து, அதில் தமிழோடு அழையுங்கள்.



உங்கள் படைப்புகள் இந்த வலைத்தளத்தில் வரவேண்டுமா? அதை இதன் வழியாக எங்களுக்கு அனுப்புங்கள்

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator