• April 4, 2024

தடைசெய்யப்பட்ட ரஷ்யா எப்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறது?

 தடைசெய்யப்பட்ட ரஷ்யா எப்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறது?

இந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா ஏன் ஆர்.ஓ.சி (ROC) என்ற பெயரில் போட்டியிடுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதில் ஒரு காரணம் இருக்கிறது. திருடனுக்கு தேள் கொட்டியது போல, ரஷ்யா இப்போது இருந்தாக வேண்டும். அதனால் தான் ROC என்ற பெயரில் ரஷ்யா பங்கேற்கிறது.


உலகளவில் விளையாட்டுப் போட்டிகள் என்ற ஒன்று நடைபெறும்போது, அதில் குறிப்பிட்ட வீரர்கள் ஊக்கமருந்து புகாரில் சிக்குவர். அவற்றில் பெரும்பாலானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.


அதுபோல் சில ஆண்டுகளுக்கு முன் ஊக்கமருந்து தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் ரஷ்யா முறைகேடு செய்திருந்தது. இதை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் கண்டுபிடித்துவிட்டது.


அதனால் 2019 முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா தனது நாட்டின் பெயரைப் பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்தது.

இதனால் அந்நாடு ROC (Russian Olympic Committee) என்று தம் பெயரை மறைமுகமாக பயன்படுத்தி விளையாடி வருகிறது.

ஒலிம்பிக்கின் துவக்க விழா அணிவகுப்பின்போது கூட ரஷ்யாவின் ஒலிம்பிக் அமைப்பின் கொடியே பயன்படுத்தப்பட்டதே தவிர ரஷ்ய தேசியக் கொடி பயன்படுத்தப்படவில்லை.

ஒருவேளை ரஷ்ய வீரர்கள் போட்டிகளில் பதக்கம் வென்றால் அவர்களின் தேசிய கீதமோ அல்லது கொடியோ ஏற்றப்படாது.


மட்டுமன்றி ரஷ்யா வெல்லும் பதக்கங்கள் அந்நாட்டின் பதக்கப் பட்டியலில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.