• April 3, 2024

தண்ணீருக்கு பதில் Coca Cola-வை அருந்தினால் என்ன ஆகும் ?

 தண்ணீருக்கு பதில் Coca Cola-வை அருந்தினால் என்ன ஆகும் ?

நம்மில் பலருக்கு coca cola அருந்தும் பழக்கம் இருக்கிறது. ஒருவேளை நாம் தண்ணீரே அருந்தாமல் வாழ்நாள் முழுக்க coca cola-வை மட்டும் அருந்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.


12 Refreshing Facts About Coca-Cola | Mental Floss

சராசரியாக ஒரு Bottle Coke-ல் 39 கிராம் சர்கரை இருக்கும். மனிதனின் உடலுக்கு ஒரு நாளில் தேவைப்படும் நீர் சத்தை பெற எட்டு coca cola டின் பாட்டில்களை அருந்த வேண்டும். அப்படி அருந்தும் பட்சத்தில் ஒரே நாளில் 312 கிராம் சர்க்கரையை நாம் உட்கொள்கிறோம் என்று அர்த்தம்.

ஒரு மனிதன் சராசரியாக 40 கிராம் வரை சர்க்கரையை ஒரே நாளில் உட்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 8 டின் பாட்டில் coca cola-வை ஒரே நாளில் நாம் உட்கொண்டால் நம் உடலுக்குத் தேவையான அளவைவிட பல மடங்கு அதிகமான சர்க்கரையை உட்கொள்ள நேரிடும்.


Coca-Cola is changing its recipe – soda fans are worried | The Independent

coca cola-வின் சுவையானது நம்மை அதிக உணவை உட்கொள்ள தூண்டும் விதத்தில் இருக்கும். தண்ணீருக்கு பதில் நாம் coca cola-வை மட்டும் அருந்தினால் தினசரி நாம் சாப்பிடும் அளவும் அதிகரிக்க நேரிடும். இதனால் நமது உடல் எடை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகரிக்கும்.

அதிக அளவில் Coke-ஐ நாம் அருந்தும் போது நமது பற்சிப்பியானது பயங்கரமாக பாதிக்கப்படும். Coke-ல் உள்ள சர்க்கரை நமது பற்களை சுற்றி தேங்கி நின்று பற்சிப்பியை பாதிக்கும். இதனால் வலி ஏற்பட்டு நமது பற்களை நாம் இழக்க நேரிடும்.

தண்ணீரைத் தவிர்த்து coke-ஐ மட்டும் நாம் அருந்தும் பட்சத்தில் நம் உடம்பில் Pottassium அளவு குறைந்துவிடும். இதனால் அடிக்கடி நாம் மயங்கி விழ வாய்ப்புள்ளது.

The History of Coca-Cola and John Pemberton

ஒரு வருடம் முழுக்க தண்ணீருக்கு பதில் coke-ஐ நாம் அருந்தும் பட்சத்தில் நமது உடல் எடையானது 600 பவுண்டுகளை கடக்க வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த அதீத பருமனானது நம் உடம்பில் பல்வேறு நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


அமிர்தமாகவே இருந்தாலும் அதை அளவுடன் உட்கொள்ள வேண்டும், என நம் முன்னோர்கள் சொன்னதை நினைவில் வைத்து எந்தெந்த விஷயங்களை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

Coke போன்ற குளிர்பானங்களை அளவுக்கு மீறி உட்கொள்ளாமல் அவ்வப்போது கொஞ்சமாக அளவறிந்து உட்கொள்ளுதல் நல்லது.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.