• April 7, 2024

உலக அளவில் Tik Tok-க்கு முதல் இடம் !!!

 உலக அளவில் Tik Tok-க்கு முதல் இடம் !!!

உலகிலேயே அதிக மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை Tik Tok செயலி பெற்றுள்ளது. சமூக வலைதளங்களின் ஜாம்பவானான Facebook-ஐ பின் தள்ளி 2020ஆம் ஆண்டில் அதிக பதிவிறக்கங்கள் கொண்ட செயலியாக டிக் டாக் உருவெடுத்துள்ளது.


TikTok plans to withdraw from Hong Kong, may face US ban - CNET

இந்திய நாட்டில் கடந்த ஆண்டு Tik Tok செயலிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் தடை இருந்தாலும், உலக அளவில் இந்த செயலிக்கான வரவேற்பு சற்றும் குறையவில்லை. 2019-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் முதல் நான்கு இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கின் அனைத்து செயலிகளையும் பின் தள்ளி டிக் டாக் முதலிடத்தை பிடித்திருப்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ள இந்தியாவில் தடை செய்யப்பட்டும் பதிவிறக்கத்தில் முதலிடம் பிடித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல.


சமீபத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள டாப் 10 செயலிகளில் 7 செயலிகள் அமெரிக்காவில் உருவான செயலிகள் என்பது தெரியவந்துள்ளது.

How To Delete Facebook Data Forever | Time

வாட்ஸ்அப்-ன் புதிய தனியுரிமை விதிகளால் வாட்ஸ் அப் உபயோகித்துக் கொண்டிருந்த பலரும் டெலிகிராம் செயலிக்கு மாறினர். இதன் விளைவால் 2019 கணக்கெடுப்பில் எட்டாவது இடத்தில் இருந்த டெலிகிராம் 2020-ல் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெலிகிராம் இந்திய நாட்டில் உருவாக்கப்பட்ட செயலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை வைத்து பார்க்கும்போது சமீப காலத்தில் டிக் டாக் நிறுவனம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் பல தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.