• March 29, 2024

தமிழ்நாட்டிற்குள் நுழைந்த Omicron வகை கொரோனா !

 தமிழ்நாட்டிற்குள் நுழைந்த Omicron வகை கொரோனா !

கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமானமான ஓமிக்ரான் வைரஸ் தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய 47 வயதான சென்னை நபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு ஓமிக்ரான் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸுக்கான முதல் பதிவு இதுவே என சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக டிசம்பர் 10ஆம் தேதி வந்த பயணிக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆறு பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. நைஜீரியாவில் இருந்து பயணம் செய்து வந்த அந்த ஒரு நபருக்கு மட்டும் கொரோனாவின் புதிய பரிமாணமான ஓமிக்ரான் வகை கொரோனா தாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

What you need to know on Omicron today - SCIENCE News

அவரது குடும்பத்தினரின் மாதிரியில் S-ஜீன் வீழ்ச்சி இருந்ததால், ஓமிக்ரானால் அவர்கள்பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழும்பியது. தற்போது தேசிய வைராலஜி நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட முடிவுகளை வைத்து பார்க்கும்போது அந்த பயணிக்கு ஓமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த பயணிக்கு ஓமிக்ரான் இருப்பதால் அவரது குடும்பத்தினருக்கும் ஓமிக்ரான் இருக்கலாம் என சந்தேகித்து அவர்களை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். இந்த ஓமிக்ரான் வகை கொரோனா இதற்கு முன் இருந்த கொரோனா வகைகளை விட வீரியம் அதிகம் உடையது.

ஓமிக்ரான் வேகமாக பரவும் ஆற்றல் கொண்டிருந்தாலும் இந்த வகை கொரோனாவால் உயிரிழப்பு பெரிதாக இருக்காது என மருத்துவ வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஓமிக்ரான் இந்தியாவில் ஒரு புதிய கொரோனா அலையை மீண்டும் உருவாக்குவதற்கான சக்தி வாய்ந்தது எனவும் வல்லுனர்கள் கணிக்கின்றனர்.


First Omicron Death In UK As New Covid Variant Spreads Like Wildfire

ஓமிக்ரான் வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமல்லாமல் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற மருத்துவர்களின் அறிவுரைகளையும் கேட்டு பின்பற்ற வேண்டும்.

இந்தியாவுக்குள் நுழைந்து தற்போது தமிழ்நாட்டிற்குள்ளும் நுழைந்துள்ள ஓமிக்ரான் வைரஸிடம் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி Deep Talks தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.