• April 4, 2024

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது !!!

 தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது !!!

பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்பதை தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருக்கிறது.


இந்த கொரோனா காலகட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எஸ்எஸ்எல்சி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

Admissions to Tamil Nadu government schools to touch 15 lakh by month end

இந்நிலையில் தமிழ்வழியில் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கை அறிவித்துள்ளது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் கூறியிருந்தார். ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் எனவும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் இரண்டாவது திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அரசு அறிவித்திருந்தது. மாணவர்களை தேர்வு எழுத தயார் செய்யும் வகையில் 15 முதல் 18 வயதுக்கு உரிய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் எடுப்பதால் இந்த வருடம் நிச்சயம் மாணவர்களுக்கு நேரடியாக பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை வசூலித்து ஜனவரி 20-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அந்த கட்டணம் செலுத்துவதற்கான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


TN teachers happy schools are reopening, but worried that there's too much  ground to cover before 10- Edexlive

இந்த அரசாணை குறித்த அறிவிப்பை தேர்வுகளின் இயக்குனரான சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எம்பிசி பட்டியல் இன மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்பதையும் அவர் அறிவித்துள்ளார்.

சுயநிதி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கான தேர்வு கட்டணத்தை விலக்கிய தமிழக அரசுக்கு deep talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.