• April 10, 2024

வேப்பங்குச்சி 1800 ரூபாயா !!! என்னப்பா சொல்றீங்க !!!

 வேப்பங்குச்சி 1800 ரூபாயா !!! என்னப்பா சொல்றீங்க !!!

பொதுவாக இந்தியர்களின் பாரம்பரிய மிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாம் பல்துலக்க உபயோகிக்கும் வேப்பங்குச்சி அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


வேப்பங்குச்சி மட்டுமின்றி நாம் உபயோகிக்கும் தைலங்கள், மரக்கட்டில்கள், ஜோல்னா பைகள் ஆகியவையும் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற பொருட்களை நமது நாட்டில் கூட இந்த மாடர்ன் காலத்தில் அதிகம் உபயோகிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hina Neem Chew Stick at Rs 10/piece | Neem Stick | ID: 13786983448

“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்ற கூற்றை நம்மைவிட அயல்நாட்டினர் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த குச்சிகளை ஒரு பாக்கெட்டில் போட்டு 1800 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர்.


வேப்பங்குச்சியை 10 ரூபாய் கூட கொடுத்து நமது நாட்டில் யாரும் வாங்க மாட்டோம். ஏனெனில் பார்க்கும் இடங்களில் எல்லாம் வேப்பமரங்கள் நம் நாட்டில் அதிகம் இருக்கும். இருந்தாலும் அயல் நாட்டினர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் டூத் பிரஷில் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் உபயோகிக்கின்றனர்.

1800 ரூபாய்க்கு விற்கப்படும் அந்த வேப்பங்குச்சி பாக்கெட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தெரிந்திருந்தால் வேப்பங்குச்சி விற்றே லட்சாதிபதி ஆகியிருக்கலாம் என பல நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வேப்பங்குச்சி Organic Tooth Brush என்ற பெயரில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது.


1800 ரூபாய் வேப்பங்குச்சி பாக்கெட்டின் புகைப்படத்தை கீழே காணுங்கள்.

12

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.